ADDED : ஜூலை 06, 2026 12:09 AM

அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி, 39, மனதை கொள்ளை அடித்துள்ளார் பத்திரிகையாளர் சோபி மார்டினஸ், 33. உலக கோப்பை தொடரில் இருவரும் நெருக்கமாக பழக, மீண்டும் 'காதல்' வதந்தி பரவியுள்ளது.
அர்ஜென்டினாவின் 'டெலிபி' டிவி சேனலில் பத்திரிகையாளராக பணியாற்றுகிறார் சோபி மார்டினஸ். கடந்த 2022ல் கத்தாரில் நடந்த உலக கோப்பை தொடரின் போது மெஸ்ஸியை அடிக்கடி பேட்டி எடுத்தார். அப்போது மெஸ்ஸியின் காந்த பார்வையால் கவரப்பட்டார். இம்முறை 'ரவுண்ட்-32' போட்டியில் கேப் வெர்டே அணியை அர்ஜென்டினா வீழ்த்தியது. பின் 'மீடியா' பகுதியில் சோபியை சந்தித்த மெஸ்ஸி சகஜமாக கட்டி அணைத்து அவரது கன்னத்தில் முத்தமிட்டார்.
அப்போது,'நான் உன்னை பார்த்தால், எதற்காக பார்க்கிறேன் என்கிறார்கள்; உன்னை பாராட்டினால், எதற்காக பாராட்டுகிறேன் என ஏதாவது கேள்வி எழுப்புகின்றனர்' என கூறினார்.
இதை கேட்ட மற்ற பத்திரிகையாளர்கள் சிரித்தனர். சோபி கூறுகையில்,''அனைவரும் பொய் சொல்கின்றனர். உங்களது மனைவி ரொகுசோ என்னிடம் பேசினார். எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம். வதந்திகளை கண்டுகொள்ள வேண்டாம் என ஆலோசனை கூறியிருக்கிறார்,''என்றார்.
சோபி உடன் பணியாற்றும் பத்திரிகையாளர் ஒருவர் கூறுகையில்,''சோபி மிகவும் அமைதியானவர். மெஸ்ஸி-ரொகுசோ தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களது வாழ்க்கை சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. சிலர் தேவையில்லாமல் வதந்தி கிளப்புகின்றனர்,'' என்றார்.
