/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி: பிரிமியர் லீக் கால்பந்தில் கலக்கல்
/
மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி: பிரிமியர் லீக் கால்பந்தில் கலக்கல்
மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி: பிரிமியர் லீக் கால்பந்தில் கலக்கல்
மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி: பிரிமியர் லீக் கால்பந்தில் கலக்கல்
ADDED : மே 16, 2024 09:58 PM

மான்செஸ்டர்: பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 3-2 என நியூகேசில் அணியை வீழ்த்தியது.
இங்கிலாந்தில் பிரிமியர் லீக் கால்பந்து 32வது சீசன் நடக்கிறது. மான்செஸ்டரில் நடந்த லீக் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட், நியூகேசில் அணிகள் மோதின. ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் யுனைடெட் அணியின் மைனோ ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் யுனைடெட் அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட நியூகேசில் அணிக்கு 49வது நிமிடத்தில் அந்தோணி கோர்டான் ஒரு கோல் அடித்தார். இதற்கு யுனைடெட் அணியின் அமத் டயல்லோ (57வது நிமிடம்), ராஸ்மஸ் ஹோஜ்லண்ட் (84வது) தலா ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தனர். தொடர்ந்து போராடிய நியூகேசில் அணிக்கு 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+2வது நிமிடம்) லீவிஸ் ஹால் ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். ஆட்டநேர முடிவில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு லீக் போட்டியில் செல்சி அணி 2-1 என பிரைட்டன் அணியை வீழ்த்தியது.
மான்செஸ்டர் யுனைடெட் அணி 37 போட்டியில், 17 வெற்றி, 6 'டிரா', 14 தோல்வி என 57 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. செல்சி அணி (60 புள்ளி) 6வது இடத்துக்கு முன்னேறியது. முதலிரண்டு இடங்களில் மான்செஸ்டர் சிட்டி (88 புள்ளி), ஆர்செனல் (86) அணிகள் உள்ளன.