sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கால்பந்து

/

மெஸ்ஸி 'மேஜிக்': அரையிறுதியில் மயாமி

/

மெஸ்ஸி 'மேஜிக்': அரையிறுதியில் மயாமி

மெஸ்ஸி 'மேஜிக்': அரையிறுதியில் மயாமி

மெஸ்ஸி 'மேஜிக்': அரையிறுதியில் மயாமி


ADDED : நவ 09, 2025 09:34 PM

Google News

ADDED : நவ 09, 2025 09:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போர்ட் லாடர்டேல்: மேஜர் லீக் கால்பந்து அரையிறுதிக்கு இன்டர் மயாமி அணி முன்னேறியது. 'பிளே-ஆப்' சுற்றுக்கான 3வது போட்டியில் மெஸ்ஸி 2 கோல் அடித்து கைகொடுக்க 4-0 என, நாஷ்வில்லி அணியை வென்றது.

அமெரிக்கா, கனடாவில், முன்னணி கிளப் அணிகள் பங்கேற்கும் மேஜர் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் அரையிறுதிக்கான 'பிளே-ஆப்' சுற்றில் (3 போட்டி) இன்டர் மயாமி, நாஷ்வில்லி அணிகள் மோதின. முதல் போட்டியில் மயாமி அணி 3-1 என வென்றது. இரண்டாவது போட்டியில் நாஷ்வில்லி 2-1 என வெற்றி பெற்றது.

மூன்றாவது போட்டியில் ஆதிக்கம் செலுத்திய இன்டர் மயாமி அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மயாமி அணிக்கு மெஸ்ஸி 2 கோல், 2 'அசிஸ்ட்' செய்தார். முடிவில் மயாமி அணி 8-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. இதில் சின்சினாட்டி அணியை எதிர்கொள்கிறது.

இம்முறை அதிக கோல் அடித்த வீரர்களுக்கான வரிசையில் மெஸ்ஸி (29 கோல்) முதலிடத்தில் நீடிக்கிறார்.






      Dinamalar
      Follow us