/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
மோகன் பகான்-மும்பை மோதல்: ஐ.எஸ்.எல்., கால்பந்து பைனலில்
/
மோகன் பகான்-மும்பை மோதல்: ஐ.எஸ்.எல்., கால்பந்து பைனலில்
மோகன் பகான்-மும்பை மோதல்: ஐ.எஸ்.எல்., கால்பந்து பைனலில்
மோகன் பகான்-மும்பை மோதல்: ஐ.எஸ்.எல்., கால்பந்து பைனலில்
ADDED : மே 03, 2024 11:55 PM

கோல்கட்டா: ஐ.எஸ்.எல்., கால்பந்து பைனலில் இன்று மோகன் பகான், மும்பை அணிகள் மோதுகின்றன.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 10வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கோல்கட்டாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் இன்று நடக்கும் பைனலில் 'நடப்பு சாம்பியன்' மோகன் பகான், மும்பை சிட்டி அணிகள் மோதுகின்றன.
இம்முறை லீக் சுற்றில் 15 வெற்றி, 3 'டிரா', 4 தோல்வி என 48 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த மோகன் பகான் அணி முதன்முறையாக ஐ.எஸ்.எல்., ஷீல்டு வென்றது. அடுத்து நடந்த அரையிறுதியில் ஒடிசா அணியை வென்று மூன்றாவது முறையாக (2020-21, 2022-23, 2023-24) பைனலுக்கு முன்னேறியது.
சமீபத்தில் கோல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் 2-1 என மும்பை அணியை வீழ்த்திய மோகன் பகான் மீண்டும் ஆதிக்கம் செலுத்தினால் தொடர்ந்து 2வது முறையாக ஐ.எஸ்.எல்., சாம்பியன் ஆகலாம்.
லீக் சுற்றில் 14 வெற்றி, 5 'டிரா', 3 தோல்வி என 47 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்த மும்பை அணி, அரையிறுதியில் கோவா அணியை வீழ்த்தி 2வது முறையாக (2020-21, 2023-24) பைனலுக்குள் நுழைந்தது. கடந்த 2020-21 சீசன் பைனலில் மோகன் பகானை வீழ்த்திய உற்சாகத்தில் மும்பை அணி உள்ளது. மீண்டும் அசத்தினால் தனது 2வது ஐ.எஸ்.எல்., பட்டம் வெல்லலாம்.