/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
மோகன் பகான்-மும்பை 'டிரா': ஐ.எஸ்.எல்., கால்பந்தில் 'விறுவிறு'
/
மோகன் பகான்-மும்பை 'டிரா': ஐ.எஸ்.எல்., கால்பந்தில் 'விறுவிறு'
மோகன் பகான்-மும்பை 'டிரா': ஐ.எஸ்.எல்., கால்பந்தில் 'விறுவிறு'
மோகன் பகான்-மும்பை 'டிரா': ஐ.எஸ்.எல்., கால்பந்தில் 'விறுவிறு'
ADDED : செப் 13, 2024 11:18 PM

கோல்கட்டா: மோகன் பகான், மும்பை அணிகள் மோதிய ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டி 'டிரா' ஆனது.
இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நேற்று துவங்கியது. மொத்தம் 13 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று கோல்கட்டாவில் நடந்த முதல் லீக் போட்டியில் மோகன் பகான், 'நடப்பு சாம்பியன்' மும்பை சிட்டி அணிகள் மோதின.
ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் மும்பை வீரர் டிரி, 'சேம்சைடு' கோல் அடித்தார். பின், 28வது நிமிடத்தில் ஆல்பர்டோ ரோட்ரிக்ஸ் ஒரு கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் மோகன் பகான் அணி 2-0 என முன்னிலை பெற்றிருந்தது.
இரண்டாவது பாதியின் 70வது நிமிடத்தில் மும்பையின் டிரி, ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய மும்பை அணிக்கு, கடைசி நிமிடத்தில் க்ரூமா ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 2-2 என 'டிரா' ஆனது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டன.