ADDED : ஜூன் 29, 2026 12:05 AM

மான்டெரே: மெக்சிகோவின் மான்டெரே மைதானத்தில் நடக்கும் மற்றொரு ‛ரவுண்டு-32' போட்டியில் உலகத் தரவரிசையில் அடுத்தடுத்த இடத்திலுள்ள மொராக்கோ (‛நம்பர்-7'), நெதர்லாந்து (‛நம்பர்-8') அணிகள் மோதுகின்றன.
மொராக்கோ அணி, வலிமையான பிரேசிலுக்கு எதிராக ‛டிரா' செய்தது. அடுத்து ைஹதி, ஸ்காட்லாந்தை சாய்த்து, பட்டியலில் 2வது இடம் பெற்று, அடுத்த சுற்றுக்கு வந்துள்ளது. 3 கோல் அடித்த சாய்பரி, தலா ஒரு கோல் அடித்து உதவிய ஹகிமி, ரஹிமி மீண்டும் கைகொடுக்க முயற்சிக்கலாம்.
நெதர்லாந்து அணியும் 3ல் 2 வெற்றி, ஒரு ‛டிரா' செய்து, பட்டியலில் முதலிடம் பெற்றது. பங்கேற்ற 10 தொடரிலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதில் கடைசியாக பங்கேற்ற 6 தொடரில் 5ல் காலிறுதிக்கு முன்னேறியது. கடைசியாக பங்கேற்ற 11 போட்டிகளில் தோற்காமல் (8 வெற்றி, 3 'டிரா') வலம் வந்த நெதர்லாந்தின் அசத்தல் தொடருமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இத்தொடரின் முதல் 3 போட்டியிலும், ஆட்டம் துவங்கிய 20 நிமிடத்தில் தலா ஒரு கோல் அடித்த பிரையன் புரோப்பே, அணிக்கு பலம் சேர்க்கிறார். முன்னணி வீரர் டிம்பெர் காயத்தால் அவதிபடுவது அணிக்கு சிக்கல் தரலாம்.
முந்துவது யார்
இரு அணிகள் மோதிய 3 போட்டியில் நெதர்லாந்து 2ல் வென்றது. 1 போட்டியில் மொராக்கோ வெற்றி பெற்றுள்ளது.
