/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
வடகிழக்கு யுனைடெட் 'சாம்பியன்': துாரந்த் கோப்பை கால்பந்தில்
/
வடகிழக்கு யுனைடெட் 'சாம்பியன்': துாரந்த் கோப்பை கால்பந்தில்
வடகிழக்கு யுனைடெட் 'சாம்பியன்': துாரந்த் கோப்பை கால்பந்தில்
வடகிழக்கு யுனைடெட் 'சாம்பியன்': துாரந்த் கோப்பை கால்பந்தில்
ADDED : ஆக 31, 2024 10:01 PM

கோல்கட்டா: துாரந்த் கோப்பை கால்பந்து தொடரில் வடகிழக்கு யுனைடெட் அணி முதன்முறையாக சாம்பியன் ஆனது. பைனலில் 4-3 என 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் மோகன் பகான் அணியை வீழ்த்தியது.
துாரந்த் கோப்பை கால்பந்து 133வது சீசன் நடந்தது. கோல்கட்டாவில் நடந்த பைனலில் மோகன் பகான், வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதின. ஜேசன் ஸ்டீவன் கம்மிங்ஸ் (11வது நிமிடம், 'பெனால்டி'), சஹால் (45+5வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுக்க முதல் பாதி முடிவில் மோகன் பகான் அணி 2-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட வடகிழக்கு யுனைடெட் அணிக்கு அஜாரை (55வது நிமிடம்), கில்லர்மோ (58வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தன். ஆட்டநேர முடிவில் போட்டி 2-2 என சமநிலையில் இருந்தது. பின் போட்டி 'பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. இதில் அசத்திய வடகிழக்கு யுனைடெட் அணி 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இத்தொடரில் 18வது முறையாக கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்த மோகன் பகான் அணி, 13வது முறையாக 2வது இடம் பிடித்தது.