/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
வடகிழக்கு யுனைடெட் வெற்றி: ஐ.எஸ்.எல்., கால்பந்தில்
/
வடகிழக்கு யுனைடெட் வெற்றி: ஐ.எஸ்.எல்., கால்பந்தில்
வடகிழக்கு யுனைடெட் வெற்றி: ஐ.எஸ்.எல்., கால்பந்தில்
வடகிழக்கு யுனைடெட் வெற்றி: ஐ.எஸ்.எல்., கால்பந்தில்
ADDED : நவ 23, 2024 10:14 PM

புதுடில்லி: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் வடகிழக்கு யுனைடெட் அணி 2-1 என பஞ்சாப் அணியை வீழ்த்தியது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. டில்லியில் நடந்த லீக் போட்டியில் பஞ்சாப், வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய வடகிழக்கு யுனைடெட் அணிக்கு கில்லர்மோ பெர்னாண்டஸ் (15வது நிமிடம்), நெஸ்டர் அல்பியாச் (17வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். முதல் பாதி முடிவில் வடகிழக்கு யுனைடெட் அணி 2-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட பஞ்சாப் அணிக்கு 88வது நிமிடத்தில் இவான் நோவோசெலெக் ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். ஆட்டநேர முடிவில் வடகிழக்கு யுனைடெட் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. வடகிழக்கு அணி 9 போட்டியில், 4 வெற்றி, 3 'டிரா', 2 தோல்வி என 15 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியது. பஞ்சாப் அணி 12 புள்ளிகளுடன் (4 வெற்றி, 3 தோல்வி) 6வது இடத்தில் உள்ளது.