/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
ஜார்ஜியாவிடம் வீழ்ந்தது போர்ச்சுகல்: 'யூரோ' கால்பந்தில் அதிர்ச்சி
/
ஜார்ஜியாவிடம் வீழ்ந்தது போர்ச்சுகல்: 'யூரோ' கால்பந்தில் அதிர்ச்சி
ஜார்ஜியாவிடம் வீழ்ந்தது போர்ச்சுகல்: 'யூரோ' கால்பந்தில் அதிர்ச்சி
ஜார்ஜியாவிடம் வீழ்ந்தது போர்ச்சுகல்: 'யூரோ' கால்பந்தில் அதிர்ச்சி
ADDED : ஜூன் 27, 2024 09:37 PM

கெல்சென்கிர்சென்: 'யூரோ' கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ஏமாற்றிய போர்ச்சுகல் அணி 0-2 என ஜார்ஜியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
ஜெர்மனியில், ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் ('யூரோ' கோப்பை) தொடர் நடக்கிறது. இதன் 'எப்' பிரிவு லீக் போட்டியில் உலகின் 'நம்பர்-6' போர்ச்சுகல் அணி, 74வது இடத்தில் உள்ள ஜார்ஜியா அணியை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் ஜார்ஜியாவின் கிவிச்சா குவரட்ஸ்கெலியா ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்கு 16வது நிமிடத்தில் கிடைத்த 'பிரீ கிக்' வாய்ப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் போஸ்ட்டை நோக்கி துாக்கி அடித்த பந்தை ஜார்ஜியா கோல்கீப்பர் ஜியோர்ஜி மார்தாஷ்விலி வெளியே தள்ளிவிட்டார். முதல் பாதி முடிவில் ஜார்ஜியா 1-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியின் 46வது நிமிடத்தில் ரொனால்டோ கோலடிக்க முயற்சித்த பந்து கோல் போஸ்ட்டுக்கு மேலே சென்று வீணானது. பின் 57வது நிமிடத்தில் ஜார்ஜியாவுக்கு கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் ஜார்ஜஸ் மிகுடாட்சே ஒரு கோல் அடித்தார். 'முடிவில் ஜார்ஜியா அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
துருக்கி வெற்றி
ஹாம்பர்க் நகரில் நடந்த மற்றொரு 'எப்' பிரிவு லீக் போட்டியில் துருக்கி, செக்குடியரசு அணிகள் மோதின. அபாரமாக ஆடிய துருக்கி அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. லீக் சுற்றின் முடிவில் 'எப்' பிரிவில் முதலிரண்டு இடம் பிடித்த போர்ச்சுகல் (6 புள்ளி), துருக்கி (6) அணிகள் 'ரவுண்டு-16' சுற்றுக்கு முன்னேறின. மூன்றாவது இடம் பிடித்த ஜார்ஜியாவும் (4) 'ரவுண்டு-16' போட்டிக்கு தகுதி பெற்றது.