/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
பி.எஸ்.ஜி., அணி சாம்பியன்: சூப்பர் கோப்பை கால்பந்தில்
/
பி.எஸ்.ஜி., அணி சாம்பியன்: சூப்பர் கோப்பை கால்பந்தில்
பி.எஸ்.ஜி., அணி சாம்பியன்: சூப்பர் கோப்பை கால்பந்தில்
பி.எஸ்.ஜி., அணி சாம்பியன்: சூப்பர் கோப்பை கால்பந்தில்
ADDED : ஆக 14, 2025 10:04 PM

உடின்: சூப்பர் கோப்பை கால்பந்து தொடரில் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இத்தாலியில், ஐரோப்பிய சூப்பர் கோப்பை கால்பந்து பைனல் நடந்தது. இதில் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பா லீக் தொடர்களின் நடப்பு சாம்பியன்களான முறையே பிரான்சின் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.,), இங்கிலாந்தின் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் மோதின.
ஆட்டநேர முடிவில் போட்டி 2-2 என சமநிலை வகித்தது. டோட்டன்ஹாம் அணிக்கு வான் டி வென் (39வது நிமிடம்), ரோமெரோ (48வது), பி.எஸ்.ஜி., அணி சார்பில் லீ காங்-இன் (85வது), ரமோஸ் (90+4வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.
பின் போட்டியின் முடிவு 'பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்பு வழங்கப்பட்டது. துவக்கத்தில் டோட்டன்ஹாம் அணி 2-0 என முன்னிலையில் இருந்தது. பின் எழுச்சி கண்ட பி.எஸ்.ஜி., அணி 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றது. இதன்மூலம் ஐரோப்பிய சூப்பர் கோப்பை வென்ற முதல் பிரான்ஸ் அணியானது. தவிர இது, நடப்பு சீசனில் பி.எஸ்.ஜி., அணி கைப்பற்றிய 5வது கோப்பையானது. சமீபத்தில் சாம்பியன்ஸ் லீக், லீக்-1 உள்ளிட்ட தொடர்களில் கோப்பை வென்றிருந்தது.