/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
ரியல் மாட்ரிட் 'சாம்பியன்': சூப்பர் கோப்பை கால்பந்தில்
/
ரியல் மாட்ரிட் 'சாம்பியன்': சூப்பர் கோப்பை கால்பந்தில்
ரியல் மாட்ரிட் 'சாம்பியன்': சூப்பர் கோப்பை கால்பந்தில்
ரியல் மாட்ரிட் 'சாம்பியன்': சூப்பர் கோப்பை கால்பந்தில்
ADDED : ஆக 15, 2024 10:36 PM

வார்சா: சூப்பர் கோப்பை கால்பந்தில் ரியல் மாட்ரிட் அணி கோப்பை வென்றது. 2-0 என அடலாண்டாவை வீழ்த்தியது.
போலந்தில், ஐரோப்பிய சூப்பர் கோப்பை கால்பந்து போட்டி நடந்தது. இதில் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பா லீக் தொடர்களின் 'நடப்பு சாம்பியன்' களான ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), அடலாண்டா (இத்தாலி) அணிகள் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட ரியல் மாட்ரிட் அணிக்கு வால்வெர்டே (59வது நிமிடம்), எம்பாப்வே (68வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். கடைசி வரை போராடிய அடலாண்டா அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று 6வது முறையாக (2002, 2014, 2016, 2017, 2022, 2024) சாம்பியன் பட்டம் வென்றது. தவிர, அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் பார்சிலோனா (5 முறை), மிலன் (5) அணிகளை முந்தி முதலிடம் பிடித்தது.