sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கால்பந்து

/

ரொனால்டோ 'ஹாட்ரிக்': சவுதி புரோ லீக் போட்டியில்

/

ரொனால்டோ 'ஹாட்ரிக்': சவுதி புரோ லீக் போட்டியில்

ரொனால்டோ 'ஹாட்ரிக்': சவுதி புரோ லீக் போட்டியில்

ரொனால்டோ 'ஹாட்ரிக்': சவுதி புரோ லீக் போட்டியில்


ADDED : மே 05, 2024 11:11 PM

Google News

ADDED : மே 05, 2024 11:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரியாத்: சவுதி புரோ லீக் போட்டியில் ரொனால்டோ 'ஹாட்ரிக்' கோல் அடிக்க 'அல்-நாசர்' அணி 6-0 என வெற்றி பெற்றது.

சவுதி அரேபியாவில் 48வது சவுதி புரோ லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. ரியாத்தில் நடந்த லீக் போட்டியில் அல்-நாசர், அல்-வெஹ்தா அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த அல்-நாசர் அணி 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அல்-நாசர் அணி சார்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 'ஹாட்ரிக்' கோல் (5, 12, 52வது நிமிடம்) அடித்தார். இது, நடப்பு சீசனில் இவரது 4வது 'ஹாட்ரிக்' கோல். இதுவரை 32 கோல் அடித்து முதலிடத்தில் உள்ளார். இன்னும் 2 கோல் அடிக்கும் பட்சத்தில் சவுதி புரோ லீக் அரங்கில் ஒரு சீசனில் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தை அப்தர்ரசாக் ஹம்தல்லாவுடன் (34 கோல், 2018-19 சீசன்) பகிர்ந்து கொள்ளலாம். அல்-நாசர் அணிக்கு இன்னும் 4 போட்டிகள் மீதமிருப்பதால் ரொனால்டோ புதிய சாதனை படைக்கலாம்.

அல்-நாசர் அணி இதுவரை விளையாடிய 30 போட்டியில், 24 வெற்றி, 2 'டிரா', 4 தோல்வி என 74 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் அல்-ஹிலால் (83 புள்ளி) உள்ளது.






      Dinamalar
      Follow us