/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
ரொனால்டோவுக்கு கவுரவம் * வருகிறது புதிய நாணயம்
/
ரொனால்டோவுக்கு கவுரவம் * வருகிறது புதிய நாணயம்
ADDED : செப் 20, 2024 10:58 PM

புதுடில்லி: கால்பந்து வீரர் ரொனால்டோ உருவம் பொறித்த நாணயம் வெளியாக உள்ளது.
போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 39. சமீபத்தில் கால்பந்து அரங்கில், அதிகாரப்பூர்வமாக 900 கோல் அடித்த முதல் வீரர் என சாதனை படைத்தார். தவிர, இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டுவிட்டர், யூ டியூப் என பல்வேறு சமூகவலை தளங்களில் இவரை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை 100 கோடிக்கும் அதிகமாக உள்ளது.
இவரை கவுரவிக்க முடிவு செய்த போர்ச்சுகல் அரசு, 7 யூரோ மதிப்புள்ள நாணயம் வெளியிட உள்ளது. ரொனால்டோ தலையுடன், அவரது ஜெர்சி எண்ணை குறிக்கும் வகையில், 'சி.ஆர்.7' என இதில் பொறிக்கப்பட்டிருக்கும். பொதுவாக அரசு தலைவர்கள், அரச குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே கிடைக்கும் 'நாணய' கவுரவம், தற்போது ரொனால்டோவுக்கு கிடைக்க உள்ளது.
எகிறும் மவுசு
இந்திய மதிப்பில் ஒரு நாணயத்தின் (7 யூரோ) விலை ரூ. 653 ஆக உள்ளது. இதை வாங்க போட்டி அதிகரித்துள்ளது. இதனால் ஒரு நாணயத்தின் விலை ரூ. 1.25 லட்சம் வரை எகிறியுள்ளது.