/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
கால்பந்து: அரையிறுதியில் இந்தியா * கடைசி நிமிடத்தில் மாலத்தீவை வென்றது

ADDED : ஆக 23, 2024 11:38 PM

லலித்புர்: தெற்காசிய கால்பந்து (20 வயது) தொடரின் அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியது. கடைசி நிமிடத்தில் அடித்த கோல் கைகொடுக்க, லீக் போட்டியில் 1-0 என மாலத்தீவை வென்றது.
தெற்காசிய கால்பந்து (20 வயதுக்குட்பட்ட) தொடரின் 6வது சீசன் நேபாளத்தில் நடக்கிறது. 6 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன. இந்திய அணி 'பி' பிரிவில் பூடான், மாலத்தீவுடன் இடம் பெற்றது. முதல் போட்டியில் பூடானை வென்றது.
நேற்று தனது இரண்டாவது போட்டியில் மாலத்தீவை சந்தித்தது. துவக்கத்தில் இருந்து இரு அணியும் கோல் அடிக்க எடுத்த எந்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. இரண்டாவது பாதியில் போட்டியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+5 வது நிமிடத்தில்), இந்திய வீரர் கிப்கென், ஒரு கோல் அடித்து கைகொடுத்தார்.
முடிவில் இந்திய அணி 1-0 என வெற்றி பெற்றது. இரு போட்டியில் வென்ற இந்தியா 6 புள்ளியுடன் பட்டியலில் முதலிடம் பிடித்து, அரையிறுதிக்கு (ஆக. 26) முன்னேறியது. இதில் நடப்பு சாம்பியன் வங்கதேசத்தை சந்திக்க உள்ளது.