/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
கால்பந்து: அரையிறுதியில் இந்தியா
/
கால்பந்து: அரையிறுதியில் இந்தியா
ADDED : செப் 24, 2024 10:48 PM

திம்பு: தெற்காசிய கால்பந்து (17 வயது) அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியது.
பூடானில் 17 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான தெற்காசிய கால்பந்து தொடர் நடக்கிறது. மொத்தம் 7 அணிகள் மோதுகின்றன. இதில் ஐந்து முறை கோப்பை வென்ற நடப்பு சாம்பியன் இந்திய அணி, 'ஏ' பிரிவில் வங்கதேசம், மாலத்தீவுடன் இடம் பெற்றது. முதல் போட்டியில் வங்கதேசத்தை 1-0 என வென்றது.
இரண்டாவது போட்டியில் நேற்று இந்திய அணி, மாலத்தீவை எதிர்கொண்டது. போட்டியின் 13வது நிமிடத்தில் இந்திய வீரர் மன்பகுபார், பந்தை சாம்சனுக்கு 'பாஸ்' செய்தார். இதை பெற்ற சாம்சன், அப்படியே தலையால் முட்டி கோலாக மாற்றினார். முதல் பாதியில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.
லுன்கிம் அபாரம்
74வது நிமிடம் இந்திய வீரர் லுன்கிம், தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். போட்டியின் 89 வது நிமிடம் மீண்டும் மிரட்டினார் லுன்கிம். இம்முறை நீண்ட துாரத்தில் இருந்து இவர் அடித்த பந்து வலைக்குள் சென்று கோலாக மாறியது. முடிவில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 2 போட்டியிலும் வென்ற இந்திய அணி 6 புள்ளியுடன், முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.