/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
இந்தியா-வங்கதேசம் மோதல் * தெற்காசிய கால்பந்து பைனலில்...
/
இந்தியா-வங்கதேசம் மோதல் * தெற்காசிய கால்பந்து பைனலில்...
இந்தியா-வங்கதேசம் மோதல் * தெற்காசிய கால்பந்து பைனலில்...
இந்தியா-வங்கதேசம் மோதல் * தெற்காசிய கால்பந்து பைனலில்...
UPDATED : செப் 29, 2024 10:46 PM
ADDED : செப் 28, 2024 11:20 PM

திம்பு: தெற்காசிய கால்பந்து பைனலில் இன்று இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன.
தெற்காசிய கால்பந்து தொடர் (17 வயது) பூடானில் நடக்கிறது. மொத்தம் 7 அணிகள் மோதின. இதில் இன்று நடக்கும் பைனலில் நடப்பு சாம்பியன் இந்தியா, வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
லீக் சுற்றில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றது இந்திய அணி. வங்கதேசம், மாலத்தீவை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் 'பி' பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த நேபாளத்தை 4-2 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்திய அணிக்கு லுன்கிம் இதுவரை 3 கோல் அடித்து கைகொடுக்கிறார். தவிர விஷால் யாதவ் 2 கோல் அடித்துள்ளார். மற்ற இந்திய வீரர்கள் சுமித் சர்மா, சாம்சன், ரிஷி சிங் தலா ஒரு கோல் அடித்து, அணிக்கு உதவுகின்றனர். இன்றும் அசத்தும் பட்சத்தில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பை வெல்லலாம்.
கடந்த ஆண்டு 16 வயதுக்குட்பட்ட தொடரில் லீக் சுற்றில் இந்தியா 1-0 என வென்றது. பின் பைனலில் 2-0 என சாதித்து சாம்பியன் ஆனது. இதுபோல, இம்முறை லீக் சுற்றில் இந்தியா, வங்கதேசத்தை 1-0 என வென்றது. இது பைனலிலும் தொடரலாம்.
தவிர, தெற்காசிய தொடர் பைனலில் இரு அணிகள் நான்கு முறை மோதின. இதில் இந்தியா 3ல் (2019ல் 18 வயது, 2022ல் 20 வயது, 2023ல் 16 வயது) சாம்பியன் ஆனது. வங்கதேசம் ஒருமுறை (2015ல் 16 வயது) வென்றது.