/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
கால்பந்து: இந்தியா சாம்பியன் * வங்கத்தை வீழ்த்தியது
/
கால்பந்து: இந்தியா சாம்பியன் * வங்கத்தை வீழ்த்தியது
கால்பந்து: இந்தியா சாம்பியன் * வங்கத்தை வீழ்த்தியது
கால்பந்து: இந்தியா சாம்பியன் * வங்கத்தை வீழ்த்தியது
ADDED : செப் 27, 2025 11:03 PM

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில், 17 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 10வது சீசன் நடந்தது. நேற்று நடந்த பைனலில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, வங்கதேச அணிகள் மோதின.
போட்டியின் 4வது நிமிடத்தில் இந்திய வீரர் தல்லால்மவுன் காங்டே, முதல் கோல் அடித்தார். 25 வது நிமிடம் வங்கதேச தரப்பில் ஒரு கோல் அடிக்கப்பட்டது. போட்டியின் 38 வது நிமிடத்தில் இந்திய வீரர் அடித்த பந்தை, வங்கதேச கோல் கீப்பர் தடுத்தார். பந்து இவரது கையில் பட்டு திரும்பியது.
அங்கிருந்த அஸ்லான் ஷா, லாவகமாக பந்தை வலைக்குள் தள்ள கோலாக மாற்றினார். இரண்டாவது பாதியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் வங்கதேச அணி ஒரு கோல் அடிக்க, போட்டி 2-2 என சமன் ஆனது.
வெற்றியாளரை முடிவு செய்ய 'பெனால்டி ஷூட் அவுட்' நடந்தது. இதில் அசத்திய இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது. தெற்காசிய கால்பந்தில் (17 வயது) இந்திய அணி ஏழாவது முறையாக சாம்பியன் ஆனது.