ADDED : மார் 04, 2024 10:09 PM

யூபியா: சந்தோஷ் டிராபி கால்பந்து அரையிறுதிக்கு சர்வீசஸ் அணி முன்னேறியது. காலிறுதியில் 2-0 என ரயில்வேஸ் அணியை வீழ்த்தியது.
அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் சந்தோஷ் டிராபி 77வது சீசன் அருணாச்சல பிரதேசத்தில் நடக்கிறது. முதல் காலிறுதியில் சர்வீசஸ், ரயில்வேஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் சர்வீசஸ் அணிக்கு கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் ஷபீல் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய சர்வீசஸ் அணிக்கு 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (45+1வது நிமிடம்) சமிர் முர்மு ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் சர்வீசஸ் அணி 2-0 என முன்னிலை பெற்றிருந்தது.
இரண்டாவது பாதியில் கடைசி நிமிடம் வரை போராடிய ரயில்வேஸ் அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் சர்வீசஸ் அணி 2-0 என வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
கோவா வெற்றி
மற்றொரு காலிறுதியில் கோவா, டில்லி அணிகள் மோதின. அபாரமாக ஆடிய கோவா அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
