ADDED : மே 13, 2024 11:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோல்கட்டா: பெண்களுக்கான தேசிய சீனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. மொத்தம் 30 அணிகள் மோதின. நேற்று அரையிறுதி போட்டி நடந்தன.
கோல்கட்டாவில் நடந்த முதல் அரையிறுதியில் 'ஏ' பிரிவில் முதலிடம் பெற்ற நடப்பு சாம்பியன் தமிழக அணி, 'பி' பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த மணிப்பூர் அணிகள் மோதின.
போட்டியின் 35 வது நிமிடத்தில் மணிப்பூர் வீராங்கனை ஷிபானி தேவி முதல் கோல் அடித்தார். முதல் பாதியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (45+4வது நிமிடம்) பாலா தேவி ஒரு கோல் அடித்தார். முடிவில் தமிழக அணி 0-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
மற்றொரு அரையிறுதியில் ஹரியானா, மேற்கு வங்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 'பெனால்டி ஷூட் அவுட்டில்' ஹரியானா அணி 4-3 என வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.