/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
பிரான்சை வீழ்த்தியது ஸ்பெயின்: 'யூரோ' கால்பந்து அரையிறுதியில்
/
பிரான்சை வீழ்த்தியது ஸ்பெயின்: 'யூரோ' கால்பந்து அரையிறுதியில்
பிரான்சை வீழ்த்தியது ஸ்பெயின்: 'யூரோ' கால்பந்து அரையிறுதியில்
பிரான்சை வீழ்த்தியது ஸ்பெயின்: 'யூரோ' கால்பந்து அரையிறுதியில்
ADDED : ஜூலை 10, 2024 10:02 PM

முனிக்: 'யூரோ' கோப்பை கால்பந்து அரையிறுதியில் ஸ்பெயின் அணி 2-1 என பிரான்சை வீழ்த்தியது.
ஜெர்மனியில், ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் ('யூரோ' கோப்பை) 17வது சீசன் நடக்கிறது. முனிக் நகரில் நடந்த அரையிறுதியில் ஸ்பெயின், பிரான்ஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் பிரான்சின் எம்பாப்வே துாக்கி அடித்த பந்தை கோலோ முவானி தலையால் முட்டி ஒரு கோல் அடித்தார். இதற்கு, 21வது நிமிடத்தில் ஸ்பெயினின் லாமின் யமால் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். தொடர்ந்து அசத்திய ஸ்பெயின் அணிக்கு 25வது நிமிடத்தில் டேனியல் ஆல்மோ கார்வஜல் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். முதல் பாதி முடிவில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் கடைசி நிமிடம் வரை போராடிய பிரான்ஸ் அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 5வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. இதற்கு முன் விளையாடிய 4 பைனலில், 3ல் வெற்றி (1964, 2008, 2012) பெற்று கோப்பை வென்றது ஸ்பெயின் (1984ல் தோல்வி).