தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/சுலபமாக வென்றது சுவிட்சர்லாந்து

சுலபமாக வென்றது சுவிட்சர்லாந்து

சுலபமாக வென்றது சுவிட்சர்லாந்து


ADDED : ஜூலை 03, 2026 11:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 11:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வான்கூவர்: கனடாவின் வான்கூவரில் நடந்த 'ரவுண்டு-32' போட்டியில் சுவிட்சர்லாந்து, அல்ஜீரியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் ஜோஹன் மன்ஜாம்பி 'பாஸ்' செய்த பந்தில் எம்போலோ ஒரு கோல் அடித்தார். இது, இவரது 26வது சர்வதேச கோல் ஆனது. முதல் பாதி முடிவில் சுவிட்சர்லாந்து அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியிலும் அசத்திய சுவிட்சர்லாந்து அணிக்கு 46வது நிமிடத்தில் டான் என்டோயே ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். கடைசி நிமிடம் வரை போராடிய அல்ஜீரியா அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் சுவிட்சர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 'ரவுண்டு-16' சுற்றுக்குள் நுழைந்தது. இதில் (ஜூலை 7, வான்கூவர்) கொலம்பியா அல்லது கானா அணியை சந்திக்கும்.

உலக கோப்பை அரங்கில், 1938க்கு பின் 'நாக்-அவுட்' போட்டியில் வெற்றி பெற்றது சுவிட்சர்லாந்து. கடைசியாக 1938ல் 'ரவுண்டு-16' போட்டியில் ஜெர்மனியை வென்றிருந்தது. அதன்பின் 2 காலிறுதி (1938, 1954), 5 'ரவுண்டு-16' (1994, 2006, 2014, 2018, 2022) போட்டிகளில் தோல்வியடைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us