
கோவா: யூத் லீக் கால்பந்து போட்டியில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோவாவை வென்றது.
இந்தியாவில் 17 வயதுக்குட்பட்டோருக்கான யூத் கால்பந்து லீக் தொடர் நடக்கிறது. இதில் 54 அணிகள் 11 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் போட்டிகள் நடந்தன. தற்போது 9 அணிகள் மோதும் 'பிளே ஆப்' சுற்று நடக்கிறது. சென்னை அணி குரூப்-1ல் இடம் பெற்றுள்ளது. நேற்று கோவாவில் நடந்த போட்டியில், சென்னை அணி, கோவாவை அணியை சந்தித்தது.
போட்டி துவங்கிய 4வது நிமிடத்தில் சென்னை அணிக்கு டேனியல் முதல் கோல் அடித்தார். போட்டியின் 40 வது நிமிடம் கோவா வீரர் பெர்ணான்டஸ் ஒரு கோல் அடிக்க ஸ்கோர் 1-1 என சமன் ஆனது.
இரண்டாவது பாதியில் போட்டியின் 77 வது நிமிடத்தில் சென்னை அணிக்கு தாஜ் கான் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். முடிவில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை நடந்த 2 போட்டியிலும் வென்ற சென்னை அணி 6 புள்ளியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.