தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/அர்ஜென்டினா ஆதிக்கம் தொடருமா: ஜோர்டானுடன் மோதல்

அர்ஜென்டினா ஆதிக்கம் தொடருமா: ஜோர்டானுடன் மோதல்

அர்ஜென்டினா ஆதிக்கம் தொடருமா: ஜோர்டானுடன் மோதல்


ADDED : ஜூன் 27, 2026 11:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2026 11:43 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டெக்சாஸ்: உலக கோப்பை தொடரில் இன்று நடக்கும் போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணி, அறிமுக அணியான ஜோர்டானை எதிர்கொள்கிறது.

அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் ‛பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இன்று காலை அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள ஆர்லிங்டன் மைதானத்தில் நடக்கும் ‛ஜே' பிரிவு லீக் போட்டியில் உலகின் ‛நம்பர்--1', அர்ஜென்டினா அணி, 72 வது இடத்திலுள்ள ஜோர்டானை சந்திக்கிறது. அர்ஜென்டினா அணி தனது முதல் இரு போட்டியில் அல்ஜீரியா, ஆஸ்திரியாவை வீழ்த்தி, ‛ரவுண்டு--32' சுற்றுக்கு முன்னேறி விட்டது

மெஸ்ஸி ‛ஐந்து'இன்று தனது மூன்றாவது, கடைசி லீக் போட்டியில் பங்கேற்கிறது. கேப்டன் மெஸ்ஸியை பொறுத்தவரையில் முதல் இரு போட்டியில் ‛ஹாட்ரிக்' உட்பட 5 கோல் அடித்துள்ளார். உலக கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்த ‛முதல்வன்' மெஸ்ஸி (18 கோல், 28 போட்டி) பெரும் பலம். ஒருவேளை இவருக்கு இன்று ஓய்வு தரப்படும் பட்சத்தில் நிகோ பாஸ், ஜூலியன் ஆல்வரஸ் என இருவரும் தாக்குதல் பணியை கவனித்துக் கொள்ள உள்ளனர்.இவர்களுக்கு பலம் சேர்க்க மத்திய களத்தில் பரெடெஸ், செல்சோ, பலாசியஸ் உதவ காத்திருக்கின்றனர். தற்காப்பு பகுதியில் ஓடமெண்டி, மான்டியல் உள்ளிட்டோர் கைகொடுக்கலாம். கோல் கீப்பர் மார்டினஸ் அனுபவம் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

அர்ஜென்டினா பங்கேற்ற கடைசி 9 போட்டியில் 8 ல் எதிரணிகள் ஒரு கோல் கூட அடித்தது இல்லை. கடந்த போட்டியில் காயமடைந்த கிறிஸ்டியன் ரொமெரோ இன்று பங்கேற்பது சந்தேகம்.

ஜோர்டானை பொறுத்தவரையில் முதல் இரு போட்டியிலும் தோற்று, அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. இன்று ஆறுதல் வெற்றியுடன் விடை பெற முயற்சிக்கலாம். எனினும் இது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில், நடப்பு சாம்பியனை, தரவரிசையில் பின்தங்கிய ஒரு அணி வீழ்த்தியது என்ற வரலாறு இதுவரை நடந்தது இல்லை. தவிர தென் அமெரிக்க அணிகளுக்கு எதிரான கடைசி 5 போட்டியில் 4ல் தோற்றுள்ளது ஜோர்டான். தாக்குதல் வீரர் ஆல்வன், மத்திய களத்தின் நிசார் அல் ராஷ்தன் மட்டும் முதல் இரு போட்டியில் தலா ஒரு கோல் அடித்துள்ளனர். மற்றபடி அபு தாஹா, அல் மார்டி என யாரும் பெரியளவு சோபித்தது இல்லை.

ஆஸ்திரியா--அல்ஜீரியா சவால்

மிசவுரி: அமெரிக்காவின் கன்சாஸ் சிட்டியில் இன்று நடக்கும் 'ஜே' பிரிவின் மற்றொரு போட்டியில் ஆஸ்திரியா, -அல்ஜீரியா மோதுகின்றன. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று, 3 புள்ளியுடன் உள்ளன. இன்று வெல்லும் அணி எளிதாக அடுத்த சுற்றுக்கு செல்லலாம். ஒரு வேளை போட்டி 'டிரா' ஆனால், தலா 4 புள்ளி பெறலாம். கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் ஆஸ்திரியா 'ரவுண்டு--32' சுற்றுக்கு முன்னேறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us