/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
பணக்கார கால்பந்து அணிகள் * ரியல் மாட்ரிட் 'டாப்'
/
பணக்கார கால்பந்து அணிகள் * ரியல் மாட்ரிட் 'டாப்'
ADDED : மே 24, 2024 10:51 PM

நியூ ஜெர்சி: உலகின் அதிக பணக்கார கால்பந்து அணி பட்டியலில் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் கிளப் முதலிடம் பிடித்துள்ளது.
அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை சார்பில் அதிக சம்பளம் பெறும் 'டாப்-50' உலக விளையாட்டு வீரர்கள் பட்டியல் வெளியானது. தற்போது உலகளவில் பணக்கார கால்பந்து அணிகள் பட்டியல் வெளியானது.
இதில் ஸ்பெயினின் லா லிகா தொடரில் பங்கேற்கும் ரியல் மாட்ரிக் அணி, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. கடந்த 11 ஆண்டில் 8 முறை முதலிடத்தில் உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ. 54,960- கோடியாக உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் இந்த அணி ரூ. 7,270 கோடி வருமானம் ஈட்டியுள்ளது.
இங்கிலாந்தின் இங்கிலீஷ் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்கும் மான்செஸ்டர் யுனைடெட் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த அணிக்கு மதிப்பு ரூ. 54,543 கோடி. அணியின் ஆண்டு வருமானம் ரூ. 6,537 கோடியாக உள்ளது. மூன்றாவது இடத்தில் ஸ்பெயினின் பார்சிலோனா அணி (மொத்த மதிப்பு ரூ. 46,633 கோடி) மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த அணிக்கு ஆண்டுக்கு ரூ. 1,207 கோடி வருமானம் வருகிறது.
'டாப்-10' அணிகள்
அணி/நாடு மதிப்பு (கோடி)
ரியல் மாட்ரிட்/ஸ்பெயின் ரூ. 54,960
மான்செஸ்டர் யுனைடெட்/இங்கிலாந்து ரூ. 54,543
பார்சிலோனா/ஸ்பெயின் ரூ. 46,633
லிவர்பூல்/இங்கிலாந்து ரூ. 44,717
மான்செஸ்டர் சிட்டி/இங்கிலாந்து ரூ. 42,469
பேயர்ன் முனிக்/ஜெர்மனி ரூ. 41,636
பாரிஸ் ஜெயன்ட் ஜெர்மைன்/பிரான்ஸ் ரூ. 36,640
டாட்டன்ஹாம்/இங்கிலாந்து ரூ. 26,647
செல்சி/இங்கிலாந்து ரூ. 26,064
ஆர்சனல்/இங்கிலாந்து ரூ. 21,651