/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
போல் வால்ட்: டுப்ளான்டிஸ் அபாரம்
/
போல் வால்ட்: டுப்ளான்டிஸ் அபாரம்
ADDED : பிப் 15, 2025 11:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெர்லின்: உள்ளரங்கு போல் வால்ட் போட்டியில் டுப்ளான்டிஸ் சாதனை படைத்தார்.
ஜெர்மனியின் பெர்லினில உள்ளரங்க தடகள போட்டி நடந்தது. ஆண்களுக்கான போல் வால்ட் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியன், சுவீடனின் டுப்ளான்டிஸ் பங்கேற்றார். பாரிஸ் ஒலிம்பிக்கில் 6.25 மீ., உயரம் தாண்டி தங்கம் வென்ற இவர், அடுத்து போலந்து போட்டியில் 6.26 மீ.., தாண்டி புதிய சாதனை படைத்து இருந்தார்.
இம்முறை 2025ல் களமிறங்கிய முதல் போட்டியில் 6.10 மீ., உயரம் தாண்டி முதலிடம் பிடித்தார். இது, உள்ளரங்கு போட்டியில் இவரது சிறந்த செயல்பாடு ஆனது. கிரீசின் இம்மானுயல் கராலிஸ் 5.94 மீ., தாண்டி இரண்டாவது இடம் பெற்றார்.

