sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

வாலிபால்: இந்தியா வெற்றி

/

வாலிபால்: இந்தியா வெற்றி

வாலிபால்: இந்தியா வெற்றி

வாலிபால்: இந்தியா வெற்றி


ADDED : மே 28, 2024 10:43 PM

Google News

ADDED : மே 28, 2024 10:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணிலா: ஆசிய வாலிபால் தொடரில் இந்திய பெண்கள் அணி, 3-1 என இந்தோனேஷியாவை வீழ்த்தியது.

பிலிப்பைன்சில் பெண்களுக்கான ஆசிய வாலிபால் சாலஞ்ச் கோப்பை தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டி லீக் முறையில் நடந்தன. 'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி 4 போட்டியில் தலா 2 வெற்றி, தோல்வியுடன் (6 புள்ளி) 3வது இடம் இடம் பிடிக்க அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

5 முதல் 8 வரையிலான இடத்தை பிடிக்க, நேற்று இந்தோனேஷியாவை சந்தித்தது. முதல் செட்டை 25-16 என கைப்பற்றியது இந்தியா. அடுத்த செட்டை 30-32 என போராடி இழந்தது. மூன்றாவது செட்டை 25-20 என வசப்படுத்தியது. இழுபறியாக இருந்த நான்காவது செட்டை இந்தியா 27-25 என கைப்பற்றியது.

முடிவில் இந்திய அணி 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்து 5-6 வது இடத்துக்காவ போட்டியில் இன்று மீண்டும் ஈரானை சந்திக்கவுள்ளது.






      Dinamalar
      Follow us