/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வாலிபால்: இந்தியா அபாரம் * ஆசிய தொடரில் ஐந்தாவது இடம்
/
வாலிபால்: இந்தியா அபாரம் * ஆசிய தொடரில் ஐந்தாவது இடம்
வாலிபால்: இந்தியா அபாரம் * ஆசிய தொடரில் ஐந்தாவது இடம்
வாலிபால்: இந்தியா அபாரம் * ஆசிய தொடரில் ஐந்தாவது இடம்
ADDED : மே 29, 2024 10:39 PM

மணிலா: ஆசிய வாலிபால் தொடரில் இந்திய பெண்கள் அணி, ஐந்தாவது இடம் பிடித்தது. கடைசி போட்டியில் ஈரானை 3-0 என சாய்த்தது.
பிலிப்பைன்சில் பெண்களுக்கான ஆசிய வாலிபால் சாலஞ்ச் கோப்பை தொடர் நடந்தது. மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டி லீக் முறையில் நடந்தன. 'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி 4 போட்டியில் தலா 2 வெற்றி, தோல்வியுடன் (6 புள்ளி) 3வது இடம் இடம் பிடிக்க அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
5 முதல் 8 வரையிலான இடங்களுக்கான போட்டியில் பங்கேற்றது. இதற்கான முதல் போட்டியில் இந்தோனேஷியாவை வென்ற இந்தியா, நேற்று ஈரானுடன் மோதியது.
முதல் செட்டை இந்தியா 25-17 என கைப்பற்றியது. அடுத்த செட்டையும் 25-16 என வசப்படுத்தியது. தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனைகள், மூன்றாவது செட்டை 25-11 என எளிதாக வென்றனர். முடிவில் இந்திய அணி 3-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது. 2022ல் வெண்கலம் வென்ற இந்தியா, இம்முறை ஐந்தாவது இடம் பிடித்தது. நேற்று நடந்த பைனலில் வியட்நாம் அணி 3-0 என கஜகஸ்தானை வீழ்த்தி சாம்பியன் ஆனது.