/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஈரானை வீழ்த்தியது இந்தியா * ஆசிய வாலிபால் தொடரில்...
/
ஈரானை வீழ்த்தியது இந்தியா * ஆசிய வாலிபால் தொடரில்...
ஈரானை வீழ்த்தியது இந்தியா * ஆசிய வாலிபால் தொடரில்...
ஈரானை வீழ்த்தியது இந்தியா * ஆசிய வாலிபால் தொடரில்...
ADDED : மே 22, 2024 10:46 PM

மணிலா: ஆசிய வாலிபால் தொடரில் இந்திய அணி, 3-0 என ஈரானை வீழ்த்தியது.
பிலிப்பைன்சில் ஆசிய வாலிபால் சாலஞ்ச் கோப்பை தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டி லீக் முறையில் நடக்கின்றன.
பட்டியலில் 'டாப்-2' இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். உலகத் தரவரிசையில் 62 வது இடத்திலுள்ள இந்திய அணி 'ஏ' பிரிவில் ஈரான், பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, சீன தைபேவுடன் இடம் பெற்றுள்ளது.
நேற்று தனது முதல் போட்டியில் 57வது இடத்திலுள்ள ஈரானை சந்தித்தது. முதல் செட்டை இந்தியா 25-17 என கைப்பற்றியது. இரண்டாவது செட்டில் 15-17 என பின்தங்கிய இந்தியா, பின் ஸ்கோரை 22-22 என சமன் செய்தது. அடுத்து 25-23 என செட்டை வசப்படுத்தியது.
மூன்றாவது செட்டில் இந்திய அணி ஒரு கட்டத்தில் 14-17 என இருந்தது. பின் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, 25-21 என வென்றது. முடிவில் இந்திய அணி 3-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
தனது அடுத்த போட்டியில் இந்திய அணி, பிலிப்பைன்சை இன்று சந்திக்க உள்ளது.

