
வார்சா: கிராண்ட் செஸ் தொடரின் ஐந்தாவது சுற்றில் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் வெற்றி பெற்றனர்.
போலந்தில் 9வது கிராண்ட் செஸ் தொடரின் முதல் சீசன் நடக்கிறது. இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன், நார்வேயின் கார்ல்சன் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். முதலில் 'ரேபிட்' செஸ் நடக்கிறது.
ஐந்தாவது சுற்றில் பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஸ் கிரியை சந்தித்தார். இதன் 21 வது நகர்த்தலில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று அசத்தினார். ஆறாவது சுற்றில் பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட்டை வென்றார். மற்றொரு போட்டியில் குகேஷ், ஜெர்மனியின் வின்சென்ட்டை, 40 வது நகர்த்தலில் வீழ்த்தினார். பின் நடந்த கார்ல்சன்-குகேஷ் இடையிலான போட்டி 'டிரா' ஆனது. அர்ஜுன், முதல் நான்கு போட்டியில் தோற்காமல் வலம் வந்த செவ்சென்கோவை (ருமேனியா) எதிர்கொண்டார்.
அர்ஜுன், 43வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். ஆறு சுற்று முடிவில் பிரக்ஞானந்தா (7 புள்ளி), அர்ஜுன் (6), குகேஷ் (6) 4, 5, 6வது இடத்தில் உள்ளனர். முதலிடத்தில் கார்ல்சன் (8) உள்ளார்.