/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பிரக்ஞானந்தா மூன்றாவது இடம்
/
பிரக்ஞானந்தா மூன்றாவது இடம்
ADDED : மே 10, 2024 10:58 PM

வார்சா: கிராண்ட் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா மூன்றாவது இடம் பிடித்தார்.
போலந்தில் 9வது கிராண்ட் செஸ் தொடரின் முதல் சீசன் நடக்கிறது. இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன், நார்வேயின் கார்ல்சன் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். முதலில் 'ரேபிட்' செஸ் நடந்தது.
ஏழாவது சுற்றில் பிரக்ஞானந்தா, கார்ல்சன் மோதினர். கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, 49 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். சக வீரர் அர்ஜுனுக்கு எதிரான 8வது சுற்று போட்டியில் துவக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய பிரக்ஞானந்தா, கடைசியில் 'டிரா' செய்தார். குகேஷ், அர்ஜுன் மோதிய 7 வது சுற்று போட்டி 'டிரா' ஆனது. 8 வது சுற்றில் குகேஷ், சீன வீரர் வெய் இயிடம் தோல்வியடைந்தார்.
மொத்தம் நடந்த ஒன்பது சுற்று முடிவில் சீனாவின் வெய் இ (13 புள்ளி), கார்ல்சன் (12) முதல் இரு இடம் பெற்றனர். பிரக்ஞானந்தா (10) மூன்றாவது இடம் பிடித்தார். அர்ஜுன் (8), குகேஷ் (7) 6வது, 10வது இடம் பெற்றனர்.