/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்தியாவுக்கு 5 தங்கம்: உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதலில்
/
இந்தியாவுக்கு 5 தங்கம்: உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதலில்
இந்தியாவுக்கு 5 தங்கம்: உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதலில்
இந்தியாவுக்கு 5 தங்கம்: உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதலில்
ADDED : அக் 02, 2024 08:22 PM

லிமா: உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் 5 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
பெருவில், உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான தனிநபர் 25 மீ., 'பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் திவான்ஷி, 577.19 புள்ளிகளுடன் 5வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். பைனலில் அசத்திய இவர், 35 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
பெண்கள் அணிகளுக்கான 25 மீ., 'பிஸ்டல்' பிரிவில் திவான்ஷி (577.19 புள்ளி), தேஜஸ்வனி (569.11), விபூதி பாட்யா (565.15) அடங்கிய இந்திய அணி 1711.45 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது.
முகேஷ் 'தங்கம்' : ஆண்களுக்கான தனிநபர் 25 மீ., 'பிஸ்டல்' பிரிவு பைனலில் இந்தியாவின் முகேஷ் நெலவல்லி, 585 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரர் சூரஜ் சர்மா (583 புள்ளி) வெள்ளி வென்றார். இது, இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெள்ளிப்பதக்கம் ஆனது.
ஆண்கள் அணிகளுக்கான 25 மீ., 'பிஸ்டல்' பிரிவில் முகேஷ் (585), சூரஜ் (583), பிரத்யும்ன் சிங் (561) அடங்கிய இந்திய அணி 1726 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை கைப்பற்றியது.
இந்தியா முதலிடம்: ஆண்கள் அணிகளுக்கான 50 மீ., 'ரைபிள்-3பி' பிரிவில் சவுர்யா சைனி (585.31), வேதாந்த் நிதின் வாக்மரே (581.24), பரிக் ஷித் சிங் பிரார் (587.29) அடங்கிய இந்திய அணி 1753.84 புள்ளிகளுடன் தங்கத்தை தட்டிச் சென்றது. இதுவரை 10 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என 14 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது.