/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
அபய் சிங் அபாரம்: ஆசிய ஸ்குவாஷ் இரட்டையரில்
/
அபய் சிங் அபாரம்: ஆசிய ஸ்குவாஷ் இரட்டையரில்
ADDED : ஜூலை 07, 2024 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜோகர்: ஆசிய இரட்டையர் ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் அபய் சிங்-வேலவன், அபய் சிங்-ஜோஷ்னா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றன.
மலேசியாவில், ஆசிய இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் நடந்தது. ஆண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் அபய் சிங், வேலவன் செந்தில்குமார் ஜோடி 11-4, 11-5 என்ற நேர் செட் கணக்கில் மலேசியாவின் ஆங் சாய் ஹங், சியாபிக் கமல் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
கலப்பு இரட்டையர் பைனலில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, அபய் சிங் ஜோடி 11-8, 10-11, 11-5 என ஹாங்காங்கின் டோங் டிஸ் விங், டாங் மிங் ஹாங் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இதன்மூலம் அபய் சிங், இரட்டை பட்டம் வென்றார்.