தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/சாதனை சிகரம்: 'தங்க' மாரியப்பன்

சாதனை சிகரம்: 'தங்க' மாரியப்பன்

சாதனை சிகரம்: 'தங்க' மாரியப்பன்


ADDED : மே 25, 2024 11:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 25, 2024 11:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய 'பாரா' தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு 28. ஐந்து வயதில் பஸ் விபத்தில் சிக்கினார். வலது முழுங்கால் பாதிக்கப்பட்டது.

பள்ளியில் வாலிபால் விளையாடினார். பின், உடற்கல்வி ஆசிரியரின் ஆலோசனைப்படி உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்றார். தனது 14வது வயதில் முதன்முறையாக உயரம் தாண்டுதல் போட்டியில் விளையாடிய இவர் 2வது இடம் பிடித்தார். இந்திய தேசிய 'பாரா' தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் (2015) மாரியப்பனின் திறமையை பார்த்த, தற்போதைய பயிற்சியாளர் சத்யநாராயணா, பெங்களூருக்கு அழைத்துச் சென்று பயிற்சி வழங்கினார்.

துனிசியாவில் நடந்த 'பாரா' கிராண்ட் பிரிக்ஸ் தடகளத்தில் சிறப்பாக செயல்பட்ட (1.78 மீ.,) மாரியப்பன், ரியோ பாராலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். இதில் தங்கம் வென்று சாதித்தார். இதன்மூலம் 2004க்கு பின் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்தியரானார். பாரிஸ் பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என நம்பலாம்.

'பயோ-டேட்டா'

பெயர்: மாரியப்பன் தங்கவேலு

பிறந்த நாள்: 28.6.1995

பிறந்த இடம்: பெரியவடக்கம்பட்டி, சேலம்

விளையாட்டு: பாரா தடகளம் - உயரம் தாண்டுதல் ('டி42', 'டி63')

வென்ற பதக்கம்

பாராலிம்பிக்: 2016ல் தங்கம், 2020ல் வெள்ளி

உலக சாம்பியன்ஷிப்: 2024ல் தங்கம்

ஆசிய பாரா விளையாட்டு: 2022ல் வெள்ளி

விருது

பத்ம ஸ்ரீ: 2017

அர்ஜுனா: 2017

கேல் ரத்னா: 2020

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us