/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
அரையிறுதியில் ஆமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிசில்
/
அரையிறுதியில் ஆமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிசில்
அரையிறுதியில் ஆமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிசில்
அரையிறுதியில் ஆமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிசில்
ADDED : செப் 04, 2024 11:07 PM

சென்னை: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் அரையிறுதிக்கு ஆமதாபாத் அணி முன்னேறியது. கடைசி லீக் போட்டியில் 12-3 என ஜெய்ப்பூரை வென்றது.
சென்னையில், அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 5வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் ஆமதாபாத், ஜெய்ப்பூர் அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் ஆமதாபாத்தின் லிலியன் பார்டெட் 2-1 (11-9, 11-10, 10-11) என ஜெய்ப்பூரின் சோ செயுங்மினை வீழ்த்தினார். பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் ஆமதாபாத்தின் பெர்னாடெட் சோக்ஸ் 3-0 (11-10, 11-3, 11-6) என்ற கணக்கில் ஜெய்ப்பூரின் சுதாசினியை தோற்கடித்தார்.
கலப்பு இரட்டையரில் அசத்திய ஆமதாபாத்தின் பெர்னாடெட், மானுஷ் ஷா ஜோடி 2-1 (11-9, 11-5, 8-11) என ஜெய்ப்பூரின் செயுங்மின், நித்யஸ்ரீ ஜோடியை வென்றது. அடுத்து நடந்த ஆண்கள், பெண்கள் ஒற்றையர் 2வது போட்டிகளில் ஆமதாபாத்தின் மானுஷ் ஷா (2-1), ரீத் ரிஷ்யா (3-0) வெற்றி பெற்றனர். முடிவில் ஆமதாபாத் அணி 12-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த பெங்களூரு (48 புள்ளி), ஆமதாபாத் (42), டில்லி (41), கோவா (37) அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் பெங்களூரு-கோவா (செப். 5), ஆமதாபாத்-டில்லி (செப். 6) அணிகள் மோதுகின்றன.