தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/தங்கம் வென்றார் அலிசா

தங்கம் வென்றார் அலிசா

தங்கம் வென்றார் அலிசா


ADDED : ஆக 16, 2026 10:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 10:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பர்மிங்காம்: இங்கிலாந்தின் பர்மிங்காமில், ஐரோப்பிய தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான மாரத்தான் ஓட்டத்தில், பந்தய துாரத்தை 2 மணி நேரம், 22 நிமிடம், 26 வினாடியில் கடந்த பின்லாந்தின் அலிசா வைனியோ தங்கம் வென்றார். ஆண்களுக்கான மாரத்தான் ஓட்டத்தில், ஜெர்மனியின் அமனல் பெட்ரோஸ் (2 மணி நேரம், 9 நிமிடம், 11 வினாடி) தங்கத்தை தட்டிச் சென்றார்.

ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

சின்சினாட்டி: அமெரிக்காவில், சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அர்ஜென்டினாவின் தியாகோ அகஸ்டின் டிரான்டே மோதினர். இதில் ஜோகோவிச் 6-2, 4-6, 4-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

கேட்டி லெடிக்கி 'வெள்ளி'

இர்வின்: அமெரிக்காவில், பான் பசிபிக் நீச்சல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 800 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவு பைனலில், ஆஸ்திரேலியாவின் லானி பாலிஸ்டர் (8 நிமிடம், 06.10 வினாடி) தங்கம் வென்றார். இது, இம்முறை 'பிரீஸ்டைல்' பிரிவில் பாலிஸ்டர் வென்ற 3வது தங்கம். ஏற்கனவே 200, 400 மீ., பிரிவில் தங்கம் வென்றிருந்தார். அமெரிக்க வீராங்கனை கேட்டி லெடிக்கி (8:07.26) வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.

எக்ஸ்டிராஸ்

* ராஞ்சியில் நடந்த துாரந்த் கோப்பை கால்பந்து காலிறுதியில், டில்லி அணி 5-1 என்ற கோல் கணக்கில் மணிப்பூரின் ரேங்டாய் அணியை வீழ்த்தியது. கொல்கட்டாவில் நடந்த மற்றொரு காலிறுதியில் ஈஸ்ட் பெங்கால் அணி 1-0 என, இந்திய ராணுவ அணியை வென்றது.

* புனேயில், பெண்களுக்கான ஜூனியர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் நடக்கிறது. 'பி' பிரிவு ('டிவிசன்-ஏ') லீக் போட்டியில் ஹரியானா அணி 10-1 என்ற கோல் கணக்கில் பெங்கால் அணியை வீழ்த்தியது. 'ஏ' பிரிவு போட்டியில் ஜார்க்கண்ட் அணி 6-0 என, சண்டிகரை வென்றது. மணிப்பூர்-உ.பி., அணிகள் மோதிய 'சி' பிரிவு போட்டி 1-1 என 'டிரா' ஆனது.

* கான்பூரில், தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் (11 வயது) தகுதிச் சுற்றில் அசத்திய தமிழகத்தின் சுந்தரமூர்த்தி, நிபிஷ், அகில் வினோத், அக் ஷாத், முகமது ரேஹன், பிரதான சுற்றுக்குள் நுழைந்தனர்.

* ஆசிய கோப்பை (20 வயது) கால்பந்து தகுதிச் சுற்றுக்கு தயாராகும் விதமாக இந்தியா, ஏமன் அணிகள், 2 நட்பு ரீதியிலான சர்வதேச போட்டியில் (ஆக. 20, 23, இடம்: பெங்களூரு) விளையாடுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us