/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
அமித் பங்கல் தேர்வு: இந்திய குத்துச்சண்டை அணி அறிவிப்பு
/
அமித் பங்கல் தேர்வு: இந்திய குத்துச்சண்டை அணி அறிவிப்பு
அமித் பங்கல் தேர்வு: இந்திய குத்துச்சண்டை அணி அறிவிப்பு
அமித் பங்கல் தேர்வு: இந்திய குத்துச்சண்டை அணி அறிவிப்பு
ADDED : ஏப் 13, 2024 10:53 PM

புதுடில்லி: பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச் சுற்றில் பங்கேற்கும் இந்திய அணிக்கு அமித் பங்கல், அருந்ததி சவுத்தரி உள்ளிட்டோர் தேர்வாகினர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 26 முதல் ஆக. 11 வரை நடக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள குத்துச்சண்டை போட்டிக்கான தகுதிச் சுற்று பாங்காக்கில் மே 25 முதல் ஜூன் 2 வரை நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இதில் அமித் பங்கல் (51 கிலோ), சச்சின் சிவாச் ஜூனியர் (57), அருந்ததி சவுத்தரி (66) உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர். உலக சாம்பியன்ஷிப் (2019) போட்டியில் வெள்ளி வென்ற அமித் பங்கல், பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டில் (2022) தங்கத்தை தட்டிச் சென்றார். தகுதிச் சுற்றில் அசத்தும் பட்சத்தில் 2வது முறையாக ஒலிம்பிக் போட்டியில் விளையாடலாம். ஏற்கனவே இவர், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றிருந்தார்.
இதுவரை இந்தியா சார்பில் பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கு நிகாத் ஜரீன் (50 கிலோ), பிரீத்தி பவார் (54), பர்வீன் ஹூடா (57), லவ்லினா (75) என 4 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த அணிக்கு ஷிவா தபா (63.5 கிலோ), ஜாஸ்மின் லம்போரியா (60), தீபக் போரியா (51), முகமது ஹுசாமுதீன் (57), லக்சய் சகார் (80) தேர்வு செய்யப்படவில்லை.

