தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/அனாஹத், அபே சிங் 'வெள்ளி': ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில்

அனாஹத், அபே சிங் 'வெள்ளி': ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில்

அனாஹத், அபே சிங் 'வெள்ளி': ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில்


ADDED : செப் 27, 2026 11:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 11:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நகோயா: ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில், இந்தியாவின் அபே சிங், அனாஹத் சிங் வெள்ளி வென்றனர்.

ஜப்பானின் அய்ச்சி - நகோயா நகரில், ஆசிய விளையாட்டு 20வது சீசன் நடக்கிறது. இதில் ஸ்குவாஷ் போட்டிக்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அபே சிங், மலேசியாவின் ஈன் யோவ் மோதினர். மொத்தம் 44 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய தமிழகத்தின் அபே சிங் 0-3 (9-11, 5-11, 5-11) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். இது, ஆசிய விளையாட்டில் அபே சிங் வென்ற 3வது பதக்கம். ஏற்கனவே ஒரு தங்கம் (2022, அணிகள்), ஒரு வெண்கலம் (2022, கலப்பு இரட்டையர்) வென்றிருந்தார்.

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் ஒற்றையரில் பதக்கம் கைப்பற்றிய 2வது இந்திய வீரரானார் அபே சிங். இதற்கு முன் சவுரவ் கோசல், 2 வெள்ளி (2014, 2022), 3 வெண்கலம் (2006, 2010, 2018) வென்றிருந்தார்.

அனாஹத் ஆறுதல்: ஸ்குவாஷ் போட்டிக்கான பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அனாஹத் சிங், மலேசியாவின் சிவசங்கரி மோதினர். மொத்தம் 27 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய அனாஹத் 0-3 (4-11, 4-11, 7-11) என தோல்வியடைந்து வெள்ளி வென்றார். இது, ஆசிய விளையாட்டில் அனாஹத் பெற்ற 3வது பதக்கம். ஏற்கனவே 2 வெண்கலம் (2022, அணிகள், கலப்பு இரட்டையர்) வென்றிருந்தார்.

ஆசிய விளையாட்டு ஒற்றையரில் பதக்கம் வென்ற 3வது இந்திய வீராங்கனையானார் அனாஹத். இதற்கு முன் தீபிகா பல்லீகல் (2 வெண்கலம், 2014, 2018), ஜோஷ்னா சின்னப்பா (1 வெண்கலம், 2018) கைப்பற்றினர்.

இம்முறை ஸ்குவாஷ் போட்டியில் 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என, 3 பதக்கம் கிடைத்துள்ளன.

தடகளத்தில் 'வெள்ளி': பெண்களுக்கான நீளம் தாண்டுதல் பைனலில் இந்தியாவின் ஆன்சி சோஜன், ஷைலி சிங் பங்கேற்றனர். ஐந்தாவது வாய்ப்பில் அதிகபட்சமாக 6.53 மீ., நீளம் தாண்டிய ஆன்சி, 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ஷைலி சிங் (6.42 மீ.,) 4வது இடம் பிடித்தார்.

* ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் பைனலில் சீனதைபேயின் பு சாவ்-சுவான், இந்தியாவின் சர்வேஷ் குஷாரே அதிகபட்சமாக தல 2.25 மீ., உயரம் தாண்டினர். இதில் முதல் வாய்ப்பில் இந்த இலக்கை எட்டிய சீனதைபே வீரர் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இரண்டாவது வாய்ப்பில் 2.25 மீ., தாண்டிய சர்வேஷ் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார்.

மூன்று 'வெண்கலம்': பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் பைனலில் இந்தியா சார்பில் ஹரிதா பத்ரா, உன்னதி பங்கேற்றனர். பந்தய துாரத்தை 23.20 வினாடியில் கடந்த ஹரிதா, 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை உன்னதி (23.46 வினாடி) 6வது இடத்தை கைப்பற்றினார்.

* ஆண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் பைனலில் ஏமாற்றிய அனிமேஷ் குஜுர் (20.80 வினாடி) 5வது இடம் பிடித்தார்.

* பெண்களுக்கான 3000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டத்தின் பைனலில், இலக்கை 9 நிமிடம், 08.67 வினாடியில் கடந்து 3வது இடம் பிடித்த இந்தியாவின் பருல் சவுத்ரி வெண்கலம் கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீராங்கனை அன்கிதா (9 நிமிடம், 19.24 வினாடி) 4வது இடம் பிடித்தார்.

* ஆண்களுக்கான டெகத்லான் போட்டியில் இந்தியா சார்பில் தேஜஸ்வின் சங்கர் பங்கேற்றார். இதில், போல் வால்ட், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், 110 மீ., தடைதாண்டும் ஓட்டம், 1500 மீ., ஓட்டம் உட்பட மொத்தம் 10 போட்டிகள் நடத்தப்படும். இதில் கிடைக்கும் புள்ளிகளின் அடிப்படையில் பதக்கம் முடிவாகும். இதன்படி 7934 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்த தேஜஸ்வின் வெண்கலம் கைப்பற்றினார்.

இந்தியாவுக்கு 4 வெள்ளி, 3 வெண்கலம் என, 7 பதக்கம் கிடைத்தன.

தடகளம்: பைனலில் இந்திய நட்சத்திரங்கள்

ஆசிய விளையாட்டு பெண்களுக்கான 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் அசத்திய இந்தியாவின் வித்யா ராம்ராஜ் (55.73 வினாடி), அனு ராகவன் (55.84) பைனலுக்கு முன்னேறினர்.

* ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் (7.84 மீ.,), டேவிட் சாலமன் (7.62 மீ.,) பைனலுக்குள் நுழைந்தனர்.

* ஆண்களுக்கான 800 மீ., ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் அசத்திய இந்தியாவின் முகமது அப்சல் (1 நிமிடம், 47.37 வினாடி) பைனலுக்கு தகுதி பெற்றார். மற்றொரு இந்திய வீரர் கிருஷ்ணன் குமார் (1:50.38) பைனல் வாய்ப்பை இழந்தார்.

* பெண்களுக்கான 4X100 மீ., தொடர் ஓட்டத்தின் தகுதிச் சுற்றில், தமன்னா, ஸ்னேஹா, சுதேஷ்னா, அபினயா அடங்கிய இந்திய அணி (43.65 வினாடி) முதலிடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தது.

துரத்தும் காயம்

ஆசிய விளையாட்டில் காயத்தால் பாதிக்கப்பட்ட இந்திய தடகள நட்சத்திரங்கள்.

பிரவீன் சித்ரவேல் ('டிரிபிள் ஜம்ப்'): போட்டியில் பங்கேற்ற போது கெண்டைக்கால் பகுதியில் தசை பிடிப்பு ஏற்பட பாதியில் வெளியேறினார்.

* ஜோதி யாராஜி (100 மீ., தடை தாண்டும் ஓட்டம்): போட்டிக்கு தயாரான போது முழங்காலில் வலி ஏற்பட்டதால் விலகினார்.

* யாஷஸ் பாலக் ஷா (400 மீ., தடை தாண்டும் ஓட்டம்): போட்டியில் பங்கேற்ற போது தொடையின் பின்பகுதி காயத்தால் பாதியில் விலகினார்.

இப்படி முன்னணி தடகள நட்சத்திரங்கள் காயத்தால் விலகியதால், அணித்தேர்வு குறித்து விமர்சனம் எழுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us