ADDED : ஏப் 27, 2024 10:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: நார்த்தர்ன் ஸ்லாம் ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் அனாஹத், சுராஜ் குமார் கோப்பை வென்றனர்.
இந்தியாவின் டில்லியில் நார்த்தர்ன் ஸ்லாம் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் அனாஹத் சிங், தென் கொரியாவின் ஹவேயியாங்கை எதிர் கொண்டார். முதல் செட்டை 11-6 என வென்ற அனாஹத், அடுத்த இரு செட்டையும் 11-4, 11-5 என கைப்பற்றினார். அனாஹத் 3-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றினார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பைனலில் இந்தியாவின் சுராஜ் குமார் சந்த், இலங்கையின் ரவிந்து லக் ஸ்ரீ மோதினர். இதில் சுராஜ் குமார் 3-2 என (11-13, 11-5, 7-11, 11-9, 11-3) வென்று கோப்பை கைப்பற்றினார்.

