/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
உ.பி., அணியில் அன்டிம் பங்கல்: புரோ மல்யுத்த லீக் ஏலத்தில்
/
உ.பி., அணியில் அன்டிம் பங்கல்: புரோ மல்யுத்த லீக் ஏலத்தில்
உ.பி., அணியில் அன்டிம் பங்கல்: புரோ மல்யுத்த லீக் ஏலத்தில்
உ.பி., அணியில் அன்டிம் பங்கல்: புரோ மல்யுத்த லீக் ஏலத்தில்
ADDED : ஜன 04, 2026 06:54 PM

புதுடில்லி: புரோ மல்யுத்த லீக் ஏலத்தில் இந்தியாவின் அன்டிம் பங்கல் (உ.பி.,), சுஜீத் (டில்லி), தலா ரூ. 52 லட்சத்திற்கு ஒப்பந்தமாகினர்.
இந்தியாவில், புரோ மல்யுத்த லீக் 5வது சீசன் (ஜன. 16 - பிப். 1) நடக்கவுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு பின் நடக்கவுள்ள இத்தொடரில், மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான வீரர், வீராங்கனைகள் ஏலம் டில்லியில் நடந்தது. ஒவ்வொரு அணிக்கும் தலா ரூ. 2 கோடி வீதம், மொத்தம் ரூ. 12 கோடி செலவிட அனுமதிக்கப்பட்டது.
உலக சாம்பியன்ஷிப் அரங்கில் 2 வெண்கலம் கைப்பற்றிய இந்திய வீராங்கனை அன்டிம் பங்கல் (53 கிலோ), ரூ. 52 லட்சத்திற்கு உ.பி., அணியில் ஒப்பந்தமானார். உலக சாம்பியன் (23 வயது) பட்டம் வென்ற இந்தியாவின் சுஜீத்தை (65 கிலோ), டில்லி அணி ரூ. 52 லட்சத்திற்கு வாங்கியது. பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் அமன் ஷெராவத் (57 கிலோ), ரூ. 51 கோடிக்கு மும்பை அணியில் இணைந்தார்.
இந்தியாவின் தினேஷ் குலியா (125 கிலோ, ரூ. 36 லட்சம், பஞ்சாப்), நவீன் மாலிக் (74 கிலோ, ரூ. 34.50 லட்சம், மும்பை), பிரியா மாலிக் (76 கிலோ, ரூ. 29 லட்சம், பஞ்சாப்), மணிஷா பன்வாலா (57 கிலோ, ரூ. 25 லட்சம், மகாராஷ்டிரா), அங்குஷ் (57 கிலோ, ரூ. 24.5 லட்சம், ஹரியானா), விஷால் (65 கிலோ, ரூ. 22.5 லட்சம், உ.பி.,), தீபக் புனியா (86 கிலோ, ரூ. 12 லட்சம், மகாராஷ்டிரா), நிஷா (62 கிலோ, ரூ. 12 லட்சம், உ.பி.,) உள்ளிட்டோர் பல்வேறு அணிகளில் ஒப்பந்தமாகினர்.
இந்த ஏலத்தில் ஜப்பான் வீராங்கனை யுய் சுசாகி (53 கிலோ), அதிகபட்சமாக ரூ. 60 லட்சத்திற்கு ஹரியானா அணியில் ஒப்பந்தமானார். போலந்து வீரர் ராபர்ட் பரன் (125 கிலோ), ரூ. 55 லட்சத்திற்கு மகாராஷ்டிரா அணியால் வாங்கப்பட்டார்.

