sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

வில்வித்தை: அன்கிதா-திராஜ் வரலாறு

/

வில்வித்தை: அன்கிதா-திராஜ் வரலாறு

வில்வித்தை: அன்கிதா-திராஜ் வரலாறு

வில்வித்தை: அன்கிதா-திராஜ் வரலாறு

1


ADDED : ஆக 03, 2024 12:07 AM

Google News

ADDED : ஆக 03, 2024 12:07 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரிஸ்: ஒலிம்பிக் வில்வித்தையில் இந்தியாவின் அன்கிதா, திராஜ் ஜோடி, அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது.

பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை கலப்பு அணிகளுக்கான 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியா, இந்தோனேஷியா அணிகள் மோதின. இந்தியா சார்பில் அன்கிதா பகத், திராஜ் பொம்மதேவரா ஜோடி பங்கேற்றது. இதில் இந்திய அணி 5-1 (37-36, 38-38, 38-37) என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்து நடந்த காலிறுதியில் இந்தியா, ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் மீண்டும் அசத்திய இந்திய ஜோடி 5-3 (38-37, 38-38, 36-37, 37-36) என வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒலிம்பிக் வில்வித்தையில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தனர்.

அடுத்து நடந்த அரையிறுதியில் இந்தியாவின் அன்கிதா-திராஜ் ஜோடி, பலம் வாய்ந்த தென் கொரியாவின் லிம் சிஹியோன், கிம் வூ-ஜின் ஜோடியை எதிர்கொண்டது. இதில் ஏமாற்றிய இந்திய ஜோடி 2-6 (38-36, 35-38, 37-38, 38-39) என்ற கணக்கில் தோல்வியடைந்து பைனல் வாய்ப்பை இழந்தது.

பின், 3-4வது இடத்துக்கான போட்டியில் இந்தியா, அமெரிக்கா மோதின. இதில் மீண்டும் ஏமாற்றிய அன்கிதா, திராஜ் ஜோடி 2-6 (37-38, 35-37, 38-34, 35-37) என தோல்வியடைந்து வெண்கலம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.

ஜூடோ: துலிகா ஏமாற்றம்

பெண்களுக்கான ஜூடோ +78 கிலோ பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் துலிகா மான், கியூபாவின் ஐடலிஸ் ஆர்டிஸ் மோதினர். இதில் ஏமாற்றிய துலிகா 0-10 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

படகு வலித்தல்: பால்ராஜ் 23வது இடம்

ஆண்களுக்கான படகு வலித்தல் ஒற்றையர் 'ஸ்கல்ஸ்' பிரிவில் இந்தியாவின் பால்ராஜ் பன்வார், இலக்கை 7 நிமிடம், 02.37 வினாடியில் அடைந்து 23வது இடம் பிடித்தார்.






      Dinamalar
      Follow us