ADDED : ஏப் 22, 2024 10:46 PM

ஷாங்காய்: உலக கோப்பை வில்வித்தை தொடர் இன்று துவங்குகிறது. இந்தியாவின் தீபிகா குமாரி மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
உலக கோப்பை வில்வித்தை தொடரின் 18 வது சீசன் 'ஸ்டேஜ் 1' இன்று சீனாவின் ஷாங்காய் நகரில் துவங்குகிறது. அடுத்த மூன்று ஸ்டேஜ் போட்டிகள் தென் கொரியா (இச்சான்), துருக்கி (அன்டல்யா), மெக்சிகோவில் (டிலக்ஸ்கலா) நடக்கவுள்ளன. இதுவரை நடந்த உலக கோப்பை தொடரில் வென்ற நட்சத்திரங்கள், ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது கிடையாது. இம்முறை உலக கோப்பை, பாரிஸ் ஒலிம்பிக் என இரண்டிலும் சாதிக்கும் திட்டத்துடன், 300 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் சீன தொடரில் களமிறங்கியுள்ளனர்.
ஒருவேளை இதில் பதக்கம் வெல்ல முடியாத பட்சத்தில் அடுத்து ஜூன் மாதம் அன்டல்யாவில் நடக்கவுள்ள தொடரில், ஆண்கள் பிரிவில் 'டாப்-3', பெண்கள் பிரிவில் 'டாப்-4' இடம் பிடித்தால், ஒலிம்பிக் செல்ல முடியும்.
இந்தியா சார்பில் 2023 தொடரில் பங்கேற்காத முன்னணி வீராங்கனை தீபிகா குமாரி, இளம் நட்சத்திரம் ஜோதி உள்ளிட்டோர், பாரிஸ் இத்தொடரில் சாதிக்க திட்டமிட்டுள்ளனர்.
