தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/வில்வித்தை: அரையிறுதியில் தீபிகா

வில்வித்தை: அரையிறுதியில் தீபிகா

வில்வித்தை: அரையிறுதியில் தீபிகா


ADDED : ஏப் 26, 2024 10:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2024 10:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஷாங்காய்: உலக கோப்பை வில்வித்தை ரீகர்வ் பிரிவு அரையிறுதிக்கு தீபிகா குமாரி முன்னேறினார்.

உலக கோப்பை வில்வித்தை ('ஸ்டேஜ் 1') தொடர் சீனாவின் ஷாங்காய் நகரில் நடக்கிறது. பெண்களுக்கான தனிநபர் ரீகர்வ் பிரிவு காலிறுதியில், உலக தரவரிசையில் 142 வது இடத்திலுள்ள இந்தியாவின் தீபிகா குமாரி, 'நம்பர்-6' வீராங்கனை, ஒலிம்பிக்கில் 3 தங்கம் வென்ற தென் கொரியாவின் ஜியோன் ஹன்-யங்கை சந்தித்தார்.

தகுதி போட்டியில் 30 வது இடத்துக்கு தள்ளப்பட்ட தீபிகா இம்முறை சிறப்பாக செயல்பட்டார். முதல் செட்டை (0-2) இழந்த போதும், அடுத்த செட்டை சமன் (1-1) செய்தார். 3, 4வது செட்டில் (2-0, 2-0) வெற்றி பெற்றார். 5வது செட் சமன் (1-1) ஆக, தீபகா குமாரி 6-4 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். ஆண்களுக்கான ரீகர்வ் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் தருண்தீப் ராய், 3-7 என ஸ்பெயின் வீரர் டெமினோவிடம் வீழ்ந்தார்.

கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் திராஜ், அன்கிதா ஜோடி 0-6 என தென் கொரிய ஜோடியிடம் தோற்றது. அடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மெக்சிகோ அணியை எதிர்கொள்கிறது.

பைனலில் ஜோதி

காம்பவுண்டு பிரிவு கலப்பு இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, ஜோதி ஜோடி 155-151 என மெக்சிகோவின் ஆன்ட்ரியா, மெண்டெஸ் ஜோடியை வென்று பைனலுக்குள் நுழைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us