தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/வில்வித்தை: பைனலில் இந்தியா

வில்வித்தை: பைனலில் இந்தியா

வில்வித்தை: பைனலில் இந்தியா


ADDED : ஏப் 25, 2024 10:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2024 10:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஷாங்காய்: உலக கோப்பை வில்வித்தை ரீகர்வ் பிரிவு பைனலுக்கு இந்திய ஆண்கள் அணி முன்னேறியது.

உலக கோப்பை வில்வித்தை ('ஸ்டேஜ் 1') தொடர் சீனாவின் ஷாங்காய் நகரில் நடக்கிறது. நேற்று நடந்த ரீகர்வ் பிரிவு ஆண்கள் அணிகளுக்கான அரையிறுதியில் திராஜ், பிரவின் ரமேஷ், தருண்தீப் ராய் இடம் பெற்ற அணி இந்திய அணி, வலிமையான இத்தாலியை சந்தித்தது. இதில் 5-1 என வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.

ஜோதி அபாரம்

பெண்களுக்கான காம்பவுண்டு தனிநபர் பிரிவில் முதல் மூன்று சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் ஜோதி, ஆதித்தி, அவ்னீத் கவுர் காலிறுதிக்கு முன்னேறினர். இதில் ஜோதி, அவ்னீத் கவுர் மோதினர். ஜோதி 143-142 என 'திரில்' வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதியில் ஆதித்தி, 142-144 என இத்தாலியிடம் ஆன்ட்ரியாவிடம் தோற்றார்.

பிரியான்ஷ் கலக்கல்

ஆண்கள் காம்பவுண்டு மூன்றாவது சுற்றில் இந்திய வீரர் பிரியான்ஷ், உலகின் முன்னணி வீரர் மைக் ஸ்காலசரை (நெதர்லாந்து) சந்தித்தார். இப்போட்டி 149-149 என சமனில் முடிந்தது. பின் நடந்த 'ஷூட் ஆப்' போட்டியில் அசத்திய பிரியான்ஷ், 10-9 என வெற்றி பெற்றார். காலிறுதியில் துருக்கியின் பதுஹனுடன் மோதினார். இதில் 'ஷூட் ஆப்' முறையில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us