தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/பைனலில் இந்தியா * உலக கோப்பை வில்வித்தையில் அபாரம்

பைனலில் இந்தியா * உலக கோப்பை வில்வித்தையில் அபாரம்

பைனலில் இந்தியா * உலக கோப்பை வில்வித்தையில் அபாரம்


ADDED : ஏப் 24, 2024 10:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2024 10:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஷாங்காய்: உலக கோப்பை வில்வித்தை காம்பவுண்டு பிரிவில் இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் பைனலுக்கு முன்னேறின.

உலக கோப்பை வில்வித்தை ('ஸ்டேஜ் 1') தொடர் சீனாவின் ஷாங்காய் நகரில் நடக்கிறது. நேற்று காம்பவுண்டு பிரிவு அணிகளுக்கான போட்டி நடந்தன. தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட இந்தியாவின் ஜோதி, ஆதித்தி, பர்னீத் கவுர், அவ்னீத் கவுர் கூட்டணி 'நம்பர்-1' இடம் பிடித்தது.

நேற்று நடந்த காலிறுதியில் இந்திய அணி, 235-230 என துருக்கியை சாய்த்தது. அடுத்து நடந்த அரையிறுதியில் இந்திய அணி, எஸ்தோனியாவை சந்தித்தது. முதல் செட்டில் 59-60 என பின்தங்கிய இந்தியா, அடுத்த இரு செட்டில் 59-55, 60-57 என முந்தியது. நான்காவது செட்டில் 57-58 என ஏமாற்றியது. இருப்பினும் 235-230 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது. இதில் இத்தாலியை சந்திக்க உள்ளது.

ஆண்கள் அசத்தல்

ஆண்கள் காம்பவுண்டு பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, பிரியான்ஷ், பிரதமேஷ், ரஜத் சவுகான் இடம் பெற்ற அணி, தகுதிச்சுற்றில் நான்காவது இடம் பிடித்தது. நேற்று நடந்த முதல் சுற்றில் இந்திய அணி, 233-227 என பிலிப்பைன்சை வென்றது. காலிறுதியில் டென்மார்க்கை 237-234 என வீழ்த்தியது.

அரையிறுதியில் வலிமையான தென் கொரியாவுடன் மோதியது. இதன் முதல் செட்டுகள் (59-59, 59-59) சமன் ஆகின. அடுத்த இரு செட்டில் இந்தியா 58-57, 59-58 என முந்தியது. முடிவில் இந்திய அணி 235-233 என 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. இதில் நெதர்லாந்து அணியை சந்திக்க உள்ளது.



திராஜ் தேசிய சாதனை

ஆண்களுக்கான 'ரீகர்வ்' பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் திராஜ் பொம்மதேவரா, 693 புள்ளி எடுத்து தேசிய சாதனை (இதற்கு முன் 686) படைத்தார். தரவரிசையில் மூன்றாவது இடம் பிடித்தார். இந்திய வீரர் தருண்தீப் ராய் (684) 7வது இடம் பெற்றார். அணிகளுக்கான வரிசையில் இந்தியா 2வது இடம் பிடித்தது. பெண்கள் பிரிவில் தீபிகா குமாரி, அன்கிதா, பஜன் கூட்டணி 4வது இடம் பிடித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us