ADDED : நவ 10, 2025 10:52 PM

தாகா: ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப், ரீகர்வ், காம்பவுண்டு பிரிவில் இந்திய அணிகள் பைனலுக்கு முன்னேறின.
வங்கதேசத்தின் தாகாவில் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்கள் அணிகளுக்கான 'ரீகர்வ்' பிரிவில் இந்தியா சார்பில் அடானு தாஸ், ராகுல், யாஷ்தீப் சஞ்சய் இடம் பெற்ற அணி பங்கேற்கிறது. காலிறுதியில் மலேசியாவை 6-0 என வென்றது. அடுத்து நடந்த அரையிறுதியில் இந்திய அணி, இல்பாத், தஸ்டன், அலெக்சாண்டர் அடங்கிய கஜகஸ்தான் அணியை எதிர்கொண்டது.
துவக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, முடிவில் 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது. இதில் தென் கொரியாவை (நவ. 14) சந்திக்க உள்ளது.
பெண்களுக்கான காம்பவுண்டு அணிகள் பிரிவில் இந்தியாவின் தீபிக் ஷா, ஜோதி, பிரித்திகா அடங்கிய அணி பங்கேற்றது. காலிறுதியில் 235-225 என வியட்நாம் (கிம் ஆன், நிகுயேன், பம் வான்) அணியை வென்றது. அடுத்து நடந்த அரையிறுதியில் இந்தியா, வங்கதேசம் (போன்னா, குல்சும், புஸ்பிதா) மோதின. இதில் இந்திய அணி 234-227 என வென்று, பைனலுக்கு (நவ. 13) முன்னேறியது. இதில் தென் கொரியாவுடம் மோத உள்ளது.

