தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/பைனலில் இந்திய ஜோடி * உலக பாரா வில்வித்தையில்...

பைனலில் இந்திய ஜோடி * உலக பாரா வில்வித்தையில்...

பைனலில் இந்திய ஜோடி * உலக பாரா வில்வித்தையில்...


ADDED : செப் 26, 2025 10:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2025 10:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குவாங்ஜு: தென் கொரியாவின் குவான்ஜு நகரில் உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான காம்பவுண்டு இரட்டையர் பிரிவு போட்டி நடந்தன. இதற்கான தகுதிச்சுற்றில் நான்காவது இடம் பெற்ற இந்தியாவின் ஷீத்தல் தேவி, சரிதா ஜோடி, நேரடியாக காலிறுதியில் பங்கேற்றது. இதில் 5வது இடம் பிடித்த இத்தாலியின் சார்தி, பிக்கி ஜோடியை 154-150 என்ற கணக்கில் வீழ்த்தியது.

அடுத்து நடந்த அரையிறுதியில் இந்திய ஜோடி, 'நம்பர்-1' இடம் பிடித்த பிரிட்டனின் போபே பைன், ஜெசிக்கா ஜோடியை எதிர்கொண்டது. துவக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்ட இந்திய ஜோடி 152-150 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. உலக சாம்பியன்ஷிப் பெண்களுக்கான காம்பவுண்டு அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தது.

ஆண்கள் இரட்டையர் காம்பவுண்டு பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ராகேஷ் குமார், தோமன் குமார் ஜோடி 150-152 என கனடாவின் டேனியல், டிரம்லே ஜோடியிடம் தோல்வியடைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us