தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/தங்கம் வென்றார் ஷீத்தல் தேவி * இந்தியாவுக்கு 13 பதக்கம்

தங்கம் வென்றார் ஷீத்தல் தேவி * இந்தியாவுக்கு 13 பதக்கம்

தங்கம் வென்றார் ஷீத்தல் தேவி * இந்தியாவுக்கு 13 பதக்கம்

1


ADDED : செப் 09, 2026 11:04 PM

Follow on GoogleFavourite on Google

1

ADDED : செப் 09, 2026 11:04 PM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆமதாபாத்: உலக பாரா வில்வித்தை சீரிசில் தங்கம் வென்றார் ஷீத்தல் தேவி. ஒட்டுமொத்தமாக இந்தியா 13 பதக்கம் கைப்பற்றியது.

ஆமதாபாத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான உலக வில்வித்தை பாரா சீரிஸ் ('ஸ்டேஜ்-3') நடந்தது. இந்தியா, சீனா, இங்கிலாந்து உட்பட 19 நாடுகளில் இருந்து 109 பேர் பங்கேற்றனர்.

நேற்று கடைசி நாளில் பல்வேறு பிரிவுகளில் பைனல் நடந்தன. 'காம்பவுண்டு' தனிநபர் பிரிவு பைனலில், நடப்பு உலக சாம்பியன், உலகின் 'நம்பர்-1' வீராங்கனை இந்தியாவின் ஷீத்தல் தேவி 19, கஜகஸ்தானின் அய்ஜடா செய்டனை சந்தித்தார். 4 செட் முடிவில் ஷீத்தல் 115-116 என பின்தங்கி இருந்தார். கடைசி செட்டில் (29-28) சுதாரித்த ஷீத்தல், ஸ்கோரை 144-144 என சமன் செய்தார். வெற்றியாளரை முடிவு செய்ய 'ஷூட் ஆப்' நடந்தது. இதில் ஷீத்தல் 10-9 என வென்று தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.

ஹர்விந்தர் அபாரம்

'ரீகர்வ்' கலப்பு அணிகள் பைனலில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங், பாவ்னா ஜோடி, சீனாவின் லியாம், ஜியா லெய் ஜோடியை எதிர்கொண்டது. இதில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ஜோடி 6-0 என வென்று, தங்கம் வசப்படுத்தியது. இத்தொடரில் ஹர்விந்தர் வென்ற இரண்டாவது தங்கம் இது.

நான்கு வெண்கலம்

காம்பவுண்டு கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் ஷீத்தல் தேவி, தோமன் குமார் ஜோடி, 157-145 என ஈராக்கின் சாரா, அபாஸ் ஜோடியை வீழ்த்தி, வெண்கலப் பதக்கம் வென்றது.

ரீகர்வ் பெண்கள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் பாவ்னா, 0-6 என சக வீராங்கனை ராஜ்ஸ்ரீயை சாய்த்து, வெண்கலம் கைப்பற்றினார்.

காம்பவுண்டு தனிநபர் பிரிவில் இந்தியாவின் சரிதா, 141-140 என சீனாவின் வாங்கை வீழ்த்தி, வெண்கலம் வென்றார்.

* காம்பவுண்டு ஆண்கள் பிரிவில் இந்தியாவின் தோமன் குமார், 143-138 என ஈராக்கின் அபாசை வென்று, வெண்கலம் கைப்பற்றினார்.

ஒட்டுமொத்தமாக இந்திய அணி, 4 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கம் வென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us