தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/வில்வித்தை: இந்தியா ஏமாற்றம்

வில்வித்தை: இந்தியா ஏமாற்றம்

வில்வித்தை: இந்தியா ஏமாற்றம்


ADDED : ஏப் 10, 2026 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2026 11:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புயுப்லா: மெக்சிகோவில் உலக கோப்பை 'ஸ்டேஜ் 1' வில்வித்தை தொடர் நடக்கிறது. காம்பவுண்டு கலப்பு அணிகள் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரகதி, பிரவின் ஓஜாஸ் ஜோடி, டென்மார்க்கை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி, 149-157 என தோற்றது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இன்று அமெரிக்காவை எதிர்கொள்கிறது.

ரிகர்வ் தனிநபர் பிரிவில் போட்டிகள் நடந்தன. ஆண்கள் பிரிவில் இந்தியாவின் அனுபவ வீரர் அடானு தாஸ், இரண்டாவது சுற்றில் ஸ்பெயினின் பாப்லோ அச்சாவை சந்தித்தார். இதில் அடானு தாஸ் 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் இந்திய வீரர் திராஜ் பொம்மதேவரா, சக வீரர் யாஷ்தீப் சஞ்சயை சந்தித்தார். இதில் திராஜ், 6-2 என வெற்றி பெற்று, மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

பெண்கள் தனிநபர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் அன்கிதா, அமெரிக்காவின் ஒலிவியாவை 7-2 என வென்றார். மற்றொரு வீராங்கனை சிம்ரஞ்ஜீத் சிங், 7-3 என்ற கணக்கில் மெக்சிகோவின் ரெபெக்காவை வீழ்த்தினார். இந்தியாவின் கும்கும் 6-0 என செக் குடியரசின் கேவிச்சை வென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us