/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வில்வித்தை: பிரதமேஷ் கலக்கல்
/
வில்வித்தை: பிரதமேஷ் கலக்கல்
ADDED : மே 26, 2025 10:08 PM

காம்னிக்: சுலோவேனியாவில் உலக தரவரிசை வெரோனிகா கோப்பை வில்வித்தை போட்டி நடந்தது. ஆண்கள் தனிநபர் காம்பவுண்டு பிரிவில் இந்தியாவின் பிரதமேஷ் பாலசந்திர பியூஜ், முன்னாள் உலக சாம்பியன், ஆஸ்திரியாவின் நிகோ வியனர் (காலிறுதி), சக வீரர் பிரதமேஷ் ஜவஹரை (அரையிறுதி) வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார்.
இதில் நடப்பு சாம்பியன் ஈரானின் ஷமாய் யம்ரோமை எதிர்கொண்டார். முதலில் பின்தங்கிய பிரதமேஷ், பின் சிறப்பாக செயல்பட போட்டி 148-148 என சமன் ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி 'ஷூட் ஆப்' முறைக்கு சென்றது. இதில் அசத்திய பிரதமேஷ், தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் பிரதமேஷ் ஜவஹர், செக் குடியரசின் டிம் செவ்ஸ்னிக்கிடம் 'ஷூட் ஆப்' முறையில் தோல்வியடைந்தார்.