தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/அர்ஜென்டினா கோல் மழை

அர்ஜென்டினா கோல் மழை

அர்ஜென்டினா கோல் மழை


ADDED : ஏப் 01, 2026 08:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 08:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பியுனஸ் ஏர்ஸ்: அர்ஜென்டினாவில் நடந்த சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா, ஜாம்பியா அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த அர்ஜென்டினா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அர்ஜென்டினா சார்பில் மெஸ்ஸி ஒரு கோல் அடித்தார். அட்லாண்டாவில் நடந்த போட்டியில் போர்ச்சுகல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வென்றது. லண்டனில் நடந்த போட்டியில் ஜப்பான் அணி 1-0 என, இங்கிலாந்தை வீழ்த்தியது.

இரண்டாவது சுற்றில் பியான்கா

சார்லஸ்டன்: அமெரிக்காவில், சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கனடாவின் பியான்கா, ஹங்கேரியின் டால்மா கால்பி மோதினர். இதில் பியான்கா 1-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் 6-2, 6-7, 6-3 என, உக்ரைனின் டயானா யாஸ்டிரெம்ஸ்காவை வீழ்த்தினார்.

எக்ஸ்டிராஸ்

* ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், சப்-ஜூனியர் பெண்கள் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் 16வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் டில்லி அணி 2-0 என்ற கோல் கணக்கில் பெங்கால் அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் சண்டிகர் அணி 2-1 என, கர்நாடகாவை வென்றது.

* சீனாவின் மக்காவ் நகரில் நடக்கும் உலக கோப்பை டேபிள் டென்னிஸ் லீக் சுற்றில் ஏமாற்றிய இந்தியாவின் மணிகா பத்ரா (3 புள்ளி), ஸ்ரீஜா அகுலா (2), மானவ் தாக்கர் (2), பிரதான சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறினர்.

* தாய்லாந்தில், பெண்களுக்கான (20 வயது) ஆசிய கோப்பை கால்பந்து 12வது சீசன் நடக்கிறது. 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, இன்று ஜப்பானை சந்திக்கிறது. அதன்பின் ஆஸ்திரேலியா (ஏப். 5), சீனதைபே (ஏப். 8) அணிகளை எதிர்கொள்கிறது.

* சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில், 'கேலோ இந்தியா' பழங்குடியினர் விளையாட்டு நடக்கிறது. ஆண்களுக்கான மல்யுத்தம் 'பிரீஸ்டைல்' 79 கிலோ பிரிவு பைனலில் ஜம்மு காஷ்மீரின் ஹமாம் ஹுசைன் 28, இமாச்சல பிரதேசத்தின் மோகித் குமாரை வீழ்த்தினார். தேசிய அளவிலான போட்டியில் தனது முதல் தங்கத்தை கைப்பற்றினார்.

* ஜப்பானில் நடக்கும் ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் முதல் சுற்றில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், ராம்குமார் ராமநாதன் ஜோடி 2-6, 4-6 என, ஜப்பானின் யூசுகே, ஷான்சுகே ஜோடியிடம் தோல்வியடைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us